*அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் கொரோனா பெருந்தொற்று நிவாரண பணிகள் – நிறுவன தலைவர் நடிகர் ஜெய்வந்த் பெருமிதம்* தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஜெய்வந்த். ‘மத்திய சென்னை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது ‘அசால்ட்’ மற்றும் ‘ஃபாலட்’ திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ படங்கள் இரண்டும் நிறைவு பெற்ற நிலையில், வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. திரைத்துறையில் பயணித்தாலும், சமூகத்தின் மேல் கொண்ட அக்கறையால் பல்வேறு சமூக சேவைகளிலும் தன்னை முழு முனைப்புடன் ஈடுபடுத்தி கொண்டவர். சமூக நற்பணிகளுக்கெனவே அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை உருவாக்கி, ஒத்த சிந்தனையும், அர்ப்பணிப்பும் உடைய மனிதர்களோடு ஒன்றிணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கொரோனா பெருந்தொற்றால் வேலையிழந்து, தவிக்கும் மக்களுக்கு பேருதவிகளை தனது இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார். அந்த வகையில் இயக்க தோழர்களின் அயராத பங்களிப்புடன், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருப்பூர்,நாமக்கல், திண்டுக்கல், ஹோசூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளங்கண்டு தேவையான உதவிகளை, உணவு பொருட்தொகுப்புகளாக வழங்கி வருகிறார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அது மேலும் தொடரும் என்றும், அதற்கு உறுதுணையாக இருந்து களப்பணியாற்றும் நண்பர்களையும் வெகுவாக பாராட்டி மகிழ்வதாக தெரிவிக்கிறார் நடிகர் ஜெய்வந்த். மேலும், அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், பல்வேறு முன்னணி நடிக-நடிகையர், தொழிட்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து கொள்வதாக அறிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். அதே நேரம், தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் எதுவுமே இல்லாமல் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், படத்தின் வெற்றியில் ஒரு குறிப்பட்ட சதவீதத்தை சம்பளமாக தந்தால் போதுமானது என்றும் துணிச்சலாக கூறியிருக்கிறார்.