அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் ஜார்ஜ் ஓக்ஸ் நிறுவனம் இந்த கொரோனா பெரும் தொற்று காலத்தில் பணிபுரியும் முன் கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான ஆல்கஹால் கலப்பு இல்லாத எளிதில் தீ பற்றும் அபாயம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்ட 1000 GEORGE OAKES CAR SANITIZER பாட்டில்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள 11 வது மண்டல மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 23-06-2021 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜார்ஜ் ஓக்ஸ் நிறுவனம் சார்பில் திரு. சரவண குமார் (GM) அவர்கள் வழங்க மாண்புமிகு மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு க. கணபதி தலைமையில் 11மண்டல மாநகராட்சி நிர்வாக ஆணையர் திரு ராஜசேகர் அவர்கள் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் அய்யாவு நகர் நல சங்க செயலாளர் திரு பாரதியார் அவர்களும் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் பொது மேலாளர் திரு சரவணன் தங்கள் நிறுவனம் இதை போன்றே தமிழக காவல்துறை மற்றும் மருத்துவ துறை சார்ந்த வர்களுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.