*அமேசான் இந்தியாவின் முதல் மொபைலுக்கு-மட்டுமேயான வீடியோ திட்டம்: பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது*

*அமேசான் இந்தியாவின் முதல் மொபைலுக்கு-மட்டுமேயான வீடியோ திட்டம்: பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை  அறிமுகப்படுத்தியுள்ளது*

பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் முதல் வெளியீட்டிற்காக ஏர்டெலுடன் கைகோர்த்து, உயர்தர பொழுதுபோக்கினை பல கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுகிறது

பிரைம் வீடியவின் மொபைல் பதிப்பு என்பது மொபைலுக்கு-மட்டுமேயான திட்டமாகும், குறிப்பாக இந்தியா போன்ற மொபைலை முதன்மை சாதனமாகக் கொண்டுள்ள நாட்டிற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ப்ரீ-பெய்டு தொகுப்பு பேக்குகளில் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் 30 நாள் இலவச சோதனை முன்னோட்டம் கிடைக்கும். அதன் பின்னர், வாடிக்கையாளர்கள் ரூ.89 அறிமுக சலுகை விலையில் துவங்கும் ரீசார்ஜ் பேக்குகள் மூலம் பிரைம் மொபைல் பதிப்பைப் பயன்படுத்தலாம்

மும்பை, இந்தியா, 13 ஜனவரி 2021. ஒவ்வொரு இந்தியருக்கும் உயர்தர பொழுதுபோக்குக்கான அணுகலை அதிகரிப்பதற்கான தனது முயற்சிகளை துரிதப்படுத்திடும் வகையில், அமேசான் இன்று பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ.89 என்னும் அறிமுக விலையில் கிடைக்கும் மொபைலுக்கு மட்டுமேயான திட்டமாகும். மொபைலுக்கு-மட்டுமேயான பிரைம் வீடியோ திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. குறைந்தளவு தொகையில் இயக்கப்படும் இத்திட்டம், எங்கும் நிறைந்திருக்கும் ஸ்மார்ட்போன்களை, நாட்டின் பொழுதுபோக்குக்கு விருப்பமான திரையாக மாற்றும். பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு ஒரு ஒற்றை-பயனர் மொபைலுக்கு மட்டுமேயான திட்டமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு SD தரத்தில் ஸ்ட்ரீமிங்கை வழங்கும் வகையில், குறிப்பாக இந்தியா போன்ற மொபைலை முதன்மை சாதனமாகக் கொண்டுள்ள நாட்டிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் முதல் வெளியீட்டிற்காக இந்தியாவின் முதன்மை தகவல் தொடர்பு தீர்வுகள் வழங்குனரான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) உடன் பிரைம் வீடியோ கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு அறிமுகத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைக்கப்பட்ட ப்ரீ-பெய்டு பேக்குகளில் இருக்கும் அனைத்து அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸிலிருந்து அமேசானில் பதிவுசெய்வதன் மூலம், 30 நாள் இலவச சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம். இந்த இலவச 30 நாள் சோதனை முன்னோட்டத்திற்குப் பிறகு, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 89 இல் துவங்கும் அறிமுகச் சலுகைகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்வதன் மூலம் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பைத் தொடர்ந்து அனுபவிக்கலாம், 28 நாள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை 6 ஜிபி தரவுடன் பெறலாம் அல்லது பிரைம் வீடியோ மொபைல் பதிப்பையும் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு அணுகல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய 28 நாள் செல்லுபடியாகும் ரூ.299 பேக்கையும் தேர்ந்தெடுக்கலாம்.

பல்-பயனர் அணுகல், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட சாதனங்களில் ஸ்ட்ரீமிங் மற்றும் HD/UHDயில் உள்ளடக்கத்தை அனுபவிக்கும் திறன் உள்ளிட்ட முழுமையான பிரைம் வீடியோ அனுபவத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், பிரைம் மியூசிக் மற்றும் விளம்பரமில்லாத இசை உள்ளிட்ட பிற பிரைம் நன்மைகளை அணுகுவதோடு கூடுதலாக Amazon.inல் இலவச விரைவான ஷிப்பிங், 30 நாள் அமேசான் பிரைம் உறுப்பினர் தன்மை ஆகியவற்றை,  28 நாள் செல்லுபடியாகும் ரூ.131 பேக்சை ரீசார்ஜ் செய்தோ அல்லது இந்த வசதிகளுடன் கூடுதலாக அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினமும் 2 GB தரவையும் வழங்கும், ரூ. 349 பேக் மூலம் ரீசார்ஜ் செய்து பெறலாம்.

இந்த ரீசார்ஜ் பேக்குகள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மற்றும் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரீசார்ஜ் அமைவிடங்களில் கிடைக்கும். இந்த சலுகைகள் பிரைம் வீடியோவின் முழு பொழுதுபோக்கு உள்ளடக்க நூலகத்திற்கும் வரம்பற்ற அணுகலை வழங்குகின்றன, மேலும் பிரைம் வீடியோவை அணுகுவதற்கான கூடுதல் தேர்வுகள் மற்றும் விருப்பங்களுடன் வாடிக்கையாளருக்கு விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளையும் வழங்குகின்றன.

அறிமுகம் குறித்து பேசிய அமேசான் பிரைம் வீடியோ உலகளாவிய துணைத் தலைவர் ஜே மரைன் அவர்கள்: “மிக உயர்ந்த ஈடுபாட்டு விகிதங்களைக் கொண்ட உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த வரவேற்ப்பால் உந்தப்பட்டு, எங்கள் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை இன்னும் அதிகளவிலான இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி எங்கள் வழங்குதல்களை இரண்டு மடங்குகளாக மாற்ற நாங்கள் தீர்மானித்தோம். நாட்டின் அதிகப்படியான மொபைல் பிராட்பேண்ட் ஊடுருவலைக் கருத்தில் கொள்கையில், மொபைல் போன் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரீமிங் சாதனங்களில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவருகிறது. பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொழுதுபோக்குகளை எதிர்பார்க்கிறோம் எங்கள் பிரத்தியேக மற்றும் அசல் உள்ளடக்கத்துடன் ஒவ்வொரு இந்தியரையும் நாங்கள் மகிழ்விக்கவுள்ளோம்” என்று கூறினார்.

அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் நாட்டின் பொது மேலாளருமான கௌரவ் காந்தி அவர்கள்: “கடந்த 4 ஆண்டுகளில், பிரைம் வீடியோ 4,300 க்கும் மேற்பட்ட டவுன்கள் மற்றும் நகரங்களில் இருந்து பார்வையாளர்களைப் பெற்றுள்ள நாட்டின் மிகவும் விரும்பப்படும் பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையாக மாறியுள்ளது. இந்த மொபைல் பதிப்புத் திட்டம் இந்தியாவில் பிரைம் வீடியோவின் ஏற்பினை மேலும் துரிதப்படுத்தும் மற்றும் மேலும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை எங்கள் பிரபலமான பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அமேசானுக்கான இந்த முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு அதிக விருப்பங்களை (திட்டங்களை) வழங்குவதற்காக மட்டுமல்லாமல், மொபைல் தரவுத் திட்டங்களுடன் பிரைம் வீடியோவுக்கு குழுசேர எளிதான அணுகலையும் வழங்கிடும் வகையில் வடிவமைத்துள்ளது. பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான இந்தியாவில் எங்கள் முதல் கூட்டாளராக ஏர்டெலுடன் கூட்டாண்மையை மேற்கொள்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

பாரதி ஏர்டெல்லின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான சஷ்வத் சர்மா அவர்கள், “ஏர்டெல்லில், எங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். தரமான வாடிக்கையாளர்கள், ஆழ்ந்த விநியோகம் மற்றும் வீடியோவிற்கான சிறந்த-நெட்வொர்க் ஆகிய ஏர்டெல்லின் முக்கிய பலங்களுடன் இந்தியாவில் தரமான டிஜிட்டல் பொழுதுபோக்குகளை ஜனநாயகப்படுத்த அமேசானுடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

ஏர்டெல் உடனான இணைப்பு குறித்துப் பேசிய, அமேசான், மொபைல் வர்த்தக மேம்பாட்டு இயக்குனர் சமீர் பத்ரா அவர்கள், “பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான எங்கள் முதல் கூட்டாளராக ஏர்டெல் திகழ்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பு அமேசான் மற்றும் ஏர்டெல்லுக்கு இடையிலான செயல்திட்டத் தொடர்பின் ஆழத்தைக் குறிக்கிறது. ப்ரீ-பெய்டு இணைப்புகள் மற்றும் கட்டுப்படியாகும் தரவுகளால் இயக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களின் பெரிய தளத்திற்கு மிகவும் ஏற்றவையாகும் – மொபைல் பதிப்பு பிரைம் வீடியோவை பெரிய வாடிக்கையாளர் குழுவிற்கு தரமான பொழுதுபோக்காக மாற்றும். எங்கள் சேவையின் வரம்பை இந்தியாவில் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர் அடித்தளத்திற்கும் விரிவுபடுத்துவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்

அமேசான் பிரைம் வீடியோ குறித்து

பிரைம் வீடியோ ஒரு பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையாகும். இது பிரைம் உறுப்பினர்களுக்கு விருதுகள் வென்ற, அமேசான் அசல் தொடர்கள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பை வழங்குகிறது – இவை அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்க விரும்புவதைச் சுலபமாகக் கண்டுபிடிக்கும் திறனுடன் இணைந்துள்ளது

பிரைம் வீடியோவில் கிடைப்பவை: ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் அசல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven மற்றும் விருதுகளை வென்றுள்ளதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுதல்களை வென்ற, உலகளாவிய அமேசான் அசல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys,  மற்றும் The Marvelous Mrs. Maisel மற்றும் Borat Subsequent Moviefilm மற்றும் My Spy திரைப்படங்கள் ஒரு பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாக வரம்பற்ற ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கின்றன. பிரைம் வீடியோவில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கங்கள் நிறைந்துள்ளன. மேலும் அறிய பார்க்கவும் PrimeVideo.com.

பாரதி ஏர்டெல் குறித்து

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஏர்டெல் ஒரு உலகளாவிய தொலைத் தொடர்பு நிறுவனமாகும், இது தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 18 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகளவில் முதன்மையான மூன்று மொபைல் ஆபரேட்டர்களில் ஒன்றாக உள்ளது மற்றும் அதன் மொபைல் நெட்வொர்க் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. ஏர்டெல் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொலைதொடர்பு வழங்குநராகவும் மற்றும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய மொபைல் ஆபரேட்டராகவும் திகழ்கிறது. செப்டம்பர் 2020 இன் இறுதியில், ஏர்டெல் அதன் செயல்பாடுகளில் 440 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தோராயமாகக் கொண்டிருந்தது. ஏர்டெல்லின் போர்ட்ஃபோலியோவில் அதிவேக 4G/4.5G மொபைல் பிராட்பேண்ட், 1Gbps வரை வேகத்தை உறுதிப்படுத்தும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர், ஏர்டெல் Xstream 4K ஹைப்ரிட் பாக்ஸ் மூலம் டிஜிட்டல் டிவி தீர்வுகள், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஆகியவற்றுடன்,  இணைப்பு, கூட்டுறவு, கிளவுட் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முழுமையான சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பின் வழியாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வணிகங்களுக்கும் சேவை செய்கிறது. ஏர்டெல்லின் OTT சேவைகளில் சுய-சேவைக்கான ஏர்டெல் தேங்க்ஸ் ஆப், வீடியோவிற்கான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ், பொழுதுபோக்குக்கான விங்க் மியூசிக் மற்றும் வீடியோ கான்பரன்சிங்கிற்கான ஏர்டெல் ப்ளூஜீன்ஸ் ஆகியவை அடங்கும். கூடுதலாக, ஏர்டெல் நுகர்வோர் மற்றும் நிறுவன சேவைகளின் வரிசையை வழங்க ஏர்டெல் தளத்தை செயல்படுத்த உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களுடன் செயல்திட்டக் கூட்டாண்மைகளையும் உருவாக்கியுள்ளது.