*அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா திரைப்படத்தில் இயக்குனரையோ அல்லது கதாபாத்திரங்களையோ காட்டிலும் இசை முன்னிலை வகிக்கும் புதிய முறையை இயக்குனர் திலீப் குமார் கையாண்டுள்ளார்*

*அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா திரைப்படத்தில் இயக்குனரையோ அல்லது கதாபாத்திரங்களையோ காட்டிலும் இசை முன்னிலை வகிக்கும் புதிய முறையை இயக்குனர் திலீப் குமார் கையாண்டுள்ளார்*

ஜனவரி 8ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான காதல் ம்யூசிக்கல் திரைப்படமான மாறா அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இப்படத்தில் ஆர். மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை எப்படி முன்னிலை வகிக்கிறது என்பதை படத்தின் இயக்குநர் திலிப் குமார் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்புக்கு முன்னரே இசை எங்களுக்கு கிடைத்திருந்தது, பாடல்களுக்காக மட்டுமின்றி நாங்கள் விரும்பிய இரண்டு இடங்களுக்கான பின்னணி இசையும் கூட நாங்கள் பெற்றிருந்தோம். படப்பிடிப்பின் போது காட்சிகளுக்கு ஏற்றபடி படத்தில் பயன்படுத்தக் கூடிய இரண்டு முக்கியமான இசையை நாங்கள் பதிவு செய்திருந்தோம். குறிப்பாக, அதிக அழுத்தம் அதிக வார்த்தைகள் கொண்ட ஒரு சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் என்ன மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வது கடினம். காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இருக்கு. மேலும் உணர்வுப்பூர்வமான ஒரு காட்சியில் மூன்று பேர் நடிக்கும்போது அதில் ஒருவர் மட்டுமே முன்னிலை வகிக்க வேண்டும். மற்ற இருவரும் அதையே பின்தொடர வேண்டும், அல்லது இயக்குநரே முன்னிலை வகிக்க வேண்டியிருக்கும். எனவே அப்படி நாங்கள் செய்ய விரும்பவில்லை. இசையை முன்னிலைப் படுத்தும் ஒரு முறையை நாங்கள் கையிலெடுத்தோம். அதனடிப்படையில் இசையை உருவாக்கி கிட்டத்தட்ட அந்த காட்சியின் நீளத்துக்கு அந்த இசை ஒலிக்குமாறு செய்தோம். இதன் மூலம் கதாபாத்திரங்கள் அந்த இசையோட ஒன்ற முடியும். கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர், கேமரா அசைவுகள் என அனைத்தும் இசைக்கு ஏற்ப செயல்பட முடியும். எனவே அது போன்ற ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை நாங்கள் கையில் எடுத்தோம்.’

இவ்வாறு திலிப் கூறினார்.

மாயாஜாலக் கதைகளில் இருந்து தழுவப்பட்ட ஒரு காதல் ஓவியத்தை திலிப்பின் திரைப்படம் கண்முன் நிறுத்துகிறது. ஆர். மாதவன் நடித்த இப்படத்தின் டிரெய்லர் ஏராளமான பார்வைகளை பெற்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பறைசாற்றுகிறது. இப்படம், காதல், டிராமா, உணர்ச்சிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. பார்வையாளர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் மாறா பாராட்டுக்களை பெற்று வருகிறது.

200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8, 2021 அன்று மாறா உலகளாவிய அளவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆர்.மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ் மற்றூம் அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லர்களில் ஒன்றாக மாறா டிரெய்லர் மாறியுள்ளது. படத்தின் பாடல்கள் மனதுக்கு இதமான வகையில் உடனடியாக பிரபலமாகின. இன்னும் பார்க்கவில்லையெனில், இப்போதே பாருங்கள்.