அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி!
தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீதமிழ்.
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அமைச்சருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார்.
பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணியாற்றியதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளது.