இயக்குனர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு வழங்கல் !

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பெப்சி கூட்டமைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான ‘கபசுர குடிநீர்’ பொடியும் ஹோமியோபதி மருந்தான ‘ஆர்கானிக்கம் ஆல்பம் – 30’ யும் இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , இயக்குனர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி .,கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் வழங்க முன் வந்தனர். இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர்.

உடனடியாக நம் 65 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.R.பாலேஷ்வர் அவர்களை தொடர்பு கொண்டு 200 கபசுர குடிநீர் பாக்கெட்டுகளையும் 500 ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 ஹோமியோபதி மருந்து புட்டிகளையும் வழங்கி அவற்றை உட்கொள்ளும் முறையையும் விலக்கி ஒரு ஆடியோ பதிவையும் கொடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்படாமல் மனித உயிர் காக்கும் மருந்துகள் என்பதால் , சினிமா பத்திரிகையாளர் சங்கம் அனைத்து சினிமா பத்திரிகையாளர்களுக்கும் இம்மருந்துகளை வழங்க முயற்சித்து வருகிறது