உதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்…..BEST INDIAN SHORT FILM WINNER in PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL……………………………………………………… நடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. .தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள், திரை உலக ஜாம்பவான்கள், பத்திரிகை ஊடகம் இணையதளம் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்து மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள், பாரதிய ஜனதா மாநில தலைவர் L.முருகன் அவர்கள் இப்படத்தை பார்த்து உதயாவை பாராட்டியுள்ளனர்…cosmo film festival, south film and arts academy ..south america மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ,PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL திரைப்பட விழாவில் ,20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் பிலிம் ஆக “செக்யூரிட்டி” வென்றுள்ளது…..