ஒவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள் ஜுலை 13 அனுசரிக்கப்படுகிறது.

-ஒவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள் ஜுலை 13 அனுசரிக்கப்படுகிறது.
-தூரிகை போராளி,ஈழ விடுதலைக்க்காக குரல் கொடுத்தவர், தமிழ்ர் உரிமைக்காக போராடும் அனைத்து போராட்டத்திலும் அவரை காணலாம்..
-தேசிய விருது வென்ற ஓவியர்.ஆனால்
ஒரு மேடையில் விருதுகளை பற்றி பேசும்போது “ரெண்டு தேசியவிருது வாங்கி இருக்கேன்
ஆனா வீட்ல எங்க இருக்குனு தெரில”என்று நகைச்சுவையாக கூறினார்.எழுத்து கவிதை புனைவு ,நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர்.
– பாலுமகேந்திராவின் சந்தியா ராகத்தில் முதன்மை தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. பீட்சா,அநேகன்,கத்தி
கடைசியாக அவர் கனவு படமான “ஞானச்செருக்கு”
படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஞானச்செருக்கு படம் பல சரேவதேச விருதுகளையும் அங்கீகாரத்தையும் வென்ற படம்.கடந்த மார்ச் 20ஆம் தேதி தமிழக திரையில் வெளிவரும் நிலையில் கரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு திரை அரங்கை முடியது. வீரசந்தானம் பட வேலை முடிவதற்கு முன்பே காலமானார் என்பது குறிப்பிடதக்கது.நாடு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவர் நினைவாக படம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
-அவருடைய இழப்பு என்பது தமிழ்நாட்டிற்கே பெரும் இழப்புதான்.
இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மேடையில் இளைஞர்களை பற்றி
பேசும் போது “என்ன சுத்தி இருக்குற பசங்கள பாக்குற போது எனக்கு ஒளி தெரியுது”
என்று கூறினார்.அவர் இறக்கும் தருவாயில் நினைத்திருக்க கூடும் நான் தொடர முடியாத
பயணத்தை இந்த இளைஞர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று..