கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் ‘ஜூலி பாஸ்கரன்’ – ‘காதல்’ சுகுமார் இயக்கி நடிக்கிறார்

கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் ‘ஜூலி பாஸ்கரன்’ – ‘காதல்’ சுகுமார் இயக்கி நடிக்கிறார்

‘காதல்’ சுகுமார் இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘ஜூலி பாஸ்கரன்’!- பூஜையுடன் நடைபெற்ற படத்துவக்க விழா

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ‘காதல்’ சுகுமார், தற்போது கதையின் நாயகனாக நடித்து
வருவதோடு, இயக்குநராகவும் வலம் வருகிறார். குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற ‘திருட்டு விசிடி’,
‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய படங்களை இயக்கிய ‘காதல்’ சுகுமார் மூன்றாவதாக இயக்கும் படம் ‘ஜூலி பாஸ்கரன்’.

இப்படத்தை இயக்குவதோடு, கதையின் நாயகனாகவும் காதல் சுகுமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிருபையா நடிக்கிறார்.
இவர்களுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, முத்துக்காளை, போண்டா மணி, சாம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி
நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தை திருவொற்றியூர் ஆர்.பத்மநாபன் தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை
எழுதும் சதிஷ்.பி படத்தொகுப்பு பணியையும் கவனிக்கிறார். ராஜகோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர்
சொற்கோ கருணாநிதி இசையமைக்கிறார். தினா, ஜாய்மதி ஆகியோர் நடனம் அமைக்க, மிரட்டல் செல்வம் சண்டைக்காட்சிகளை
வடிவமைக்கிறார். கிரியேட்டிவ் ஹெட்டாக பி.டி.தினேஷ் பணியாற்ற, தயாரிப்பு மேலாளராக முருகானந்தம் பணியாற்றுகிறார்.
கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

மேகமலை சித்தர் அருள்மிகு வேல் ஜி அவர்களின் நல்லாசியுடன் இன்று சென்னையில் உள்ள ‘ஜூலி பாஸ்கரன்’ பட அலுவலகத்தில்
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

படம் குறித்து இயக்குநரும், நாயகனுமான ‘காதல்’ சுகுமாரிடம் கேட்ட போது, “வேகமான தற்போதைய காலக்கட்டத்தில்
கூட்டுக்குடும்ப கலாச்சாரமே இல்லாமல் போய்விட்டது. அத்தகைய கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை, விலங்குகளின் வாழ்க்கை
மூலம் காமெடியாக சொல்வது தான் இப்படத்தின் கதை.

முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என படம் பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ளது. படத்தில்
நான் கதையின் நாயகனாக நடித்தாலும், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரது வேடம் சர்பிரைஸாக இருக்கும். அதைவிட
கூடுதல் சர்பிரைஸாக படத்தில் வரும் நாய் ஒன்றின் கதாப்பாத்திரம் இருக்கும். அந்த நாய் பெயர் தான் ஜூலி, நான் தான் பாஸ்கரன்.
ஜூலிக்கும், பாஸ்கரனுக்கும் இடையே ஏற்படும் மோதல் மற்றும் காதலும் ரொம்பவே சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும்
இருக்கும்.

நாய் உள்ளிட்ட பல விலங்கள் திரைப்படங்களில் நடித்திருக்கின்றன. அப்படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இதுவரை
யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். மேலும், விலங்குகள் நடிக்கும் சில
முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் எடுப்பார்கள். ஆனால், நாங்கள் ஒரு காட்சியை கூட கிராபிக்ஸில் எடுக்காமல்,
அனைத்தையும் ஒரிஜினலாக படமாக்க உள்ளோம். இது படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும்.” என்றார்.

இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற உள்ளது. அந்த நான்கு பாடல்களையும் தேசிய விருது வென்ற முன்னணி பாடலாசிரியர்
ஒருவர் எழுத இருக்கிறாராம். தற்போது அதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் ‘ஜூலி பாஸ்கரன்’ படக்குழு, விரைவில்
அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.