‘சமீபத்திய காலத்தில் வெளியான சிறந்த தொகுப்புகளில் ஒன்று’ என்ற பாராட்டை பெற்றிருக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’

 

‘சமீபத்திய காலத்தில் வெளியான சிறந்த தொகுப்புகளில் ஒன்று’ என்ற பாராட்டை பெற்றிருக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’

 

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் இந்த தொடரைப் பற்றி, அந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதைகளுக்கான தூண்டுதல் மற்றும் முன்மாதிரி குறித்து அதனை இயக்கிய இயக்குநர்கள் பகிர்ந்துகொண்ட விவரங்கள் பின்வருமாறு…*

‘புத்தம் புது காலை’ என்ற தமிழ் தொடர் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்தத் தொடரை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்துடன் மிகவும் தொடர்புபடுத்தக் கூடியதாக படைப்புகள் இருந்ததால் பார்வையாளர்களுக்கு, கதைகளை காட்சிப்படுத்துவதில் இயக்குநர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. எதிர்மறையான விளைவுகளை மட்டும் சிந்திக்காமல், லாக்டவுனை நேர்மறையான முறையில், அனைத்து கதைகளும் விவரிக்கிறது.

சமீபத்தில் வெளியான தொகுப்புகளில் சிறந்ததாக புத்தம் புது காலை விடியாதா குறிப்பிட்டு பாராட்டப்படுவது தொடர்பாகவும், இயக்குநர்கள் கதைகள் மற்றும் அவற்றை படமாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசுகிறார்கள். தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக பணியாற்றியதற்காக தங்கள் நன்றியையும் அவர்கள் முன்வைத்தனர்.

தொகுப்பில் ஒரு அத்தியாயமாக இடம்பெற்றிருந்த ‘முக கவச முத்தம்’ குறித்தும், அதற்கான உத்வேகம் குறித்தும் அதன் இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது…

”லாக்டவுன் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டதாக பகிர்ந்துள்ளனர். மக்களின் துயரங்களைப் புறக்கணித்து உருவாக்குவது கடினம். அதே தருணம் ஒருவரால் சிரமங்களை பற்றி மட்டும் நினைத்துக் கொண்டு, ஒருவரின் வாழ்க்கையை துன்பப்படுத்திக்கொள்ள முடியாது.

ஒரு படைப்பிற்கான நுண்ணறிவு என்பது, ஒரு கதையின் தேவையை அதன் பார்வையாளர்களை சென்றடைய அவர்கள் தங்களை கண்டுபிடிக்கும் ஒரு விசயம். இக்கட்டான நேரங்களிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை அவர்கள் மீது உள்ளது. அதை மக்களுடன் பகிர்ந்து கொள்வதே ஒரு கலைப் படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இது கலைஞர்களின் சமூக பொறுப்புணர்வு என்பதை உணர்ந்தேன். இதை செய்ய எனக்கு வாய்ப்பளித்த அமேசான் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அதை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்தத் தொடர் வெற்றி பெற்றதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன்.” என்றார் இயக்குநர் பாலாஜி மோகன்.

‘படப்பிடிப்பின்போது நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் மீறி, பார்வையாளர்களுக்காக ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்பதுதான் படைப்பாளிகளின் அதிகபட்ச விருப்பம்.’ என குறிப்பிடும் ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடரில் ‘லோனர்ஸ்’ என்ற அத்தியாயத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹலிதா ஷமீம் தொடர்ந்து பேசியதாவது..

” பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையைச் சொல்லி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. லாக்டவுன் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது நடந்தது போலல்லாமல் இரண்டாவது லாக் டவுனின் போது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிப்பது எளிதானது. நாங்கள் படப்பிடிப்பை தொடங்கிய போது லாக்டவுன் முடிவுக்கு வந்துவிட்டது. படப்பிடிப்பிற்காக நாங்கள் மீண்டும் உருவாக்கி படமாக்கினோம். வேறு வார்த்தைகளில் விளக்குவதாக இருந்தால் நாங்கள் மீண்டும் லாக்டவுனை உருவாக்கினோம்.
கொரோனா காலகட்டத்தின் போது மக்கள், செல்போன்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பழகிவிட்டனர். இது காட்சிகளாக படம் பிடிப்பதில் மகிழ்ச்சியுடன் கூடிய சவாலாக இருந்தது.” என்றார்.

‘மௌனமே பார்வையாய்’ என்ற அத்தியாயத்தை இயக்கிய இயக்குநர் மதுமிதா பேசியதாவது..

” கோவிட் சமயத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பல சிரமங்களை அனுபவித்தனர். வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளியிலிருக்கும் விருந்தினர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்பில் இருப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. இவை அனைத்தும் ‘மௌனமே பார்வையாய்’ படத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடரில் சக இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியதை கௌரவமாக கருதுகிறேன்” என்றார்.

‘புத்தம் புது காலை’ முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற இரண்டாம் பாகத்தில் துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் உலகளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் ஐந்து பகுதிகள் கொண்ட ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தொடர் வெளியிடப்பட்டது.

*After the success as ‘one of the best anthologies in recent times’, Directors of Amazon Original Series Putham Pudhu Kaalai Vidiyaadhaa… talk about their inspiration for the stories!*

After the release of the Tamil anthology Putham Pudhu Kaalai, the audience has love the second part, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… which released on 14 January 2022, on Amazon Prime Video. The directors have been very excited to showcase the stories to the audience as it is very relatable with the personal experience of every human during lockdown. The story describes the lockdown in a positive way instead of thinking only the adversities.

Being hailed as one of the beat anthologies of recent times, the directors talk about their inspiration towards the stories and challenges of shooting them, putting forward their gratitude for being a part of such a masterpiece.

Talking about the inspiration for their stories that are featured as part of the anthology;
Director Balaji Mohan who has directed ‘Mugakavasa Mutham’ in “Putham Pudhu Kaalai Vidiyaadha…” shares that everybody was affected in different ways during the lockdown. Stating that it was hard to ignore people’s difficulties and create something, the director said that at the same time, one cannot keep thinking only about difficulties and make one’s life miserable.

An artistic intelligence is something that smells the need of a story to reach its audience where they can find themselves. The duty to find a ray of hope even in difficult times was upon them, Balaji said and added that the aim of an artistic creation must be to share it with the people.

“I realised that this was the social responsibility of artists. I thank Amazon Prime Video for having given me an opportunity to do this. Audiences who watch this film will be able to relate to it and that I think will pave the way for this film’s success,” Balaji said.

It is creators’ utmost desire to create a story for the audience in spite of all the challenges they face while shooting. Director Halitha Shameem who directed ‘Loners’ in “Putham Pudhu Kaalai Vidiyaadha” said that the fact that she had narrated a story that was really close to the audience had given her immense happiness. Unlike what had happened during the first lockdown, the director said “Narrating the difficulties faced by the people during the second lockdown was easy. “When we began filming, the lockdown had come to an end. We recreated the lockdown and shot the film. In other words, we recreated the lockdown,” she said. The director informed that during Corona, people had gotten used to mobile phones and video calls. Picturising this was pleasantly challenging, she said.

Director Madhumitha who directed ‘Mouname Paarvayaai’ in “Putham Pudhu Kaalai Vidiyaadha” said that people experienced a lot of difficulties with regard to communication during Covid. There were restrictions to stay in touch with family members, who were within one’s home, and contacting friends and guests who were outside. There were several difficulties when it came to staying in touch over the last two years. All these formed the basis for ‘Mouname Paarvayaai’. I consider it an honour to have worked with my fellow directors on Putham Pudhu Kaalai Vidiyaadhaa…

Following the success of the first edition, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… promises to enthrall audiences with a heartwarming narrative that celebrates the spirit of resilience and grit in the face of adversity. The five-part anthology released on this Pongal, on 14 January on Amazon Prime Video in India and more than 240 countries and territories worldwide.