செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ.

 1. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ.

  சென்னை, செப். 15, 2020: ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற  மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த கேம் ஷோ வரும் செப். 19, 2020 அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. இந்த கேம் ஷோ தளபதி அவர்களின் திரைப்படங்கள், அவரது விருப்பங்கள், பார்வைகள் மற்றும் பேச்சுக்கள் பற்றியது. விஜய்யை விரும்பும், அவரை பற்றிய எல்லா செய்திகளையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்காக இந்த கேம் ஷோ நடத்தப்படுகிறது.

  செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலுக்காக இந்த கேம் ஷோவை
  ஜி. தனஞ்ஜெயன் தலைமையிலான CEAD ஃபிலிம் கன்சல்டன்ஸி குழு உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து, மகிழ்விக்கவும், தளபதி விஜய்யை பற்றி அனைத்தும் தெரிந்த உலகின் மிகப்பெரிய ஒரு விஜய் ரசிகரை தேர்வு செய்வதுமே இந்த கேம் ஷோவின் நோக்கம்.

  இந்த கேம் ஷோ வரும் செப். 19 முதல் பத்து வாரங்களுக்கு (மொத்தம் 20 எபிசோட்கள்) ஒவ்வொரு வார இறுதியிலும் (சனி, ஞாயிறு) மாலை 6 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக வெற்றியாளரை தேர்ந்தெடுக்க கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றும் நடத்தப்படும்.

  அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பங்கேற்கும் விதமாக பிரபல யூடியூப் சேனல்களான வலைப் பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியவற்றில் இந்த கேம் ஷோ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கூடுதலாக தனஞ்சயன் மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியோரது ட்விட்டர் ஐடிக்களிலும்  அதே நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஒளிபரப்பாகும். இந்த கேம் ஷோ தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு எபிசோடிலும் தொகுப்பாளர் பத்து கேள்விகளை கேட்பார். போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் முடிவில் அந்த கேள்விகளுக்கான பதிலை திரையில் தோன்றும் ஒரு வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அனுப்ப வேண்டும். நிகழ்ச்சியின் முடிவில் 10 கேள்விகளுக்கு பதிலளிக்க போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும், அதன் பிறகு அந்த நம்பருக்கு பதிலை அனுப்ப முடியாது.

  ஒவ்வொரு எபிசோடிலும் வெற்றி பெறுபவர்கள் காலிறுதி, அரையிறுதியை தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு செல்வார்கள். மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பற்றிய தகவல்கள் கீழே:

  இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள எந்தவித நுழைவுக் கட்டணமோ அல்லது நிபந்தனைகளோ கிடையாது. தளபதி விஜயை நேசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கேம் ஷோவில் பங்கேற்கலாம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நபர் ஒரே ஒரு பதில் பதிவு மட்டுமே அனுப்ப இயலும்.  ஒரே நபர் பல பதிவுகளை அனுப்பினால் அனைத்து பதில்களும் நிராகரிக்கப்படும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கேம் ஷோவின் நேரலையை பார்த்து எபிசோடின் முடிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கும் திரையில் தோன்றும் வாட்ஸ்-அப் நம்பருக்கு பதில் அனுப்புவது மட்டுமே.

  ஒவ்வொரு எபிசோட் வெற்றியாளர்களுக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்:

  முதல் 3 வெற்றியாளர்களுக்கு – 1 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்.
  அடுத்த 7 வெற்றியாளர்களுக்கு – ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்.

  இறுதிச் சுற்று வெற்றியாளர்களுக்கு:

  முதல் பரிசு – பஜாஜ் பல்சர் 150 பைக் + உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகர் ட்ரோஃபி
  இரண்டாவது பரிசு – 8 கிராம் தங்க காசு +  ‘மாஸ்டர்’ படத்துக்கான டிக்கெட்கள் 5
  மூன்றாவது பரிசு – 4 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்

  கேம் ஷோவை பற்றிய அதிக தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஓர்  அறியப்
  அறிமுக நிகழ்ச்சி வரும் செப். 16 (புதன்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு இரண்டு யூ டியூப் சேனல்கள் (வலைப்பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல்) மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

  தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த கேம் ஷோ மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கும். வெவ்வேறு சுற்றுகளில் 10 கேள்விகள் (திரைப்படங்களை பற்றிய கேள்விகள், பாடல்கள், வசனங்கள், ஆடியோ வெளியீட்டு பேச்சுகள் உள்ளிட்டவை) கேட்கப்படும்.

  லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை கொண்டாடவும், அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கவும் நேரலையில் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது.

  நீங்கள் உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகராக இருந்தால், இது உங்களுக்காக கேம் ஷோ. தவற விடாதீர்கள். கலந்து கொண்டு விஜய்யை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் காட்டுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

  தொடக்க நிகழ்ச்சியை செப். 16 (புதன்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு வலைபேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேன்ல்களில் பார்க்கவும்.

  முதல் எபிசோட்: செப் 19 அன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேற்கண்ட சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
  தவறவிடாதீர்!

  *SEVENSCREEN STUDIO & CINEMA CENTRAL PresentsAGame Show to Select the WORLD’S BIGGEST FAN OF THALAPATHYVIJAY*

  Chennai,September 15, 2020: Seven Screen Studio, Lalit Kumar, Producer of mega budget films like ‘Master’, ‘Cobra’, ‘Thuklak Darbar’ and CinemaCentral YouTube Channel today announcedthe launch of a big Online Game Show to select the WORLD’S BIGGEST FAN OF THALAPATHY VIJAY, commencing from September19, 2020 through Live Stream at 6 p.m. The game show is on Thalapathy Vijay’sfilms, his likes, views and speeches. The game show is primarily targeted atmillions of Vijay’s fans, who love him and make social media trending out ofevery news on Vijay. The game show is conceived and executed by CEAD Film Consultancy Team headed by Dr.G. Dhananjayan for Seven ScreenStudio-Lalit Kumar and Cinema Central YouTube channel. The idea of the gameshow is to engage, entertain and connect with millions of fans of Vijay throughthis program and select the World’s Biggest Fan of Vijay, who knows everythingabout Thalapathy Vijay.The game show will be streamed live everyweekend (Saturday and Sunday) at 6 p.m from 19th September for 10weeks (total 20 episodes) followed by quarter final, semi-final and final roundto select the winners. This Game show will be streamed live in thepopular YouTube Channels Valai Pechu andCinema Central, in addition toTwitter IDs of Dhananjayang and CinemaCentralYT (Periscope) at the sametime (6 p.m) for everyone to participate from wherever they are. The game showis for millions of fans of Vijay across the world and not restricted to onlyTamil Nadu and everyone can participate in the game show.Each episode will have 10 questions fromthe anchor and the participants need to answer them at the end of the programby messaging to a WhatsApp Chatbot Numberdisplayed, at the end of each episode. The participants are given 5 minutes toanswer the 10 questions at the end of the program and after that no entry shallbe accepted by the system.There will be winners in each Episode,followed by quarter, semi and final rounds. The following are the Prize details,worth totalof Rs.10 Lakhs.Thereis no entry fee or condition attached to participate in this Game Show.

  Anyone, who love Thalapathy Vijay can participate in the Game showand the winners will be chosen based on their entry.

  One person can send only one entry. Multiple entries by the same personshall not be considered and all will be rejected. All that you need to dois watch the Live Streamed episode of the Game Show and answer the 10 questionsat the end of the episode by sending your entry to the WhatsApp Chatbot Numberdisplayed.

  Winners ofEach of the 20 Episodes:Top 3 Winners – 1 Gram gold coin + 5 ticketseach for the film ‘Master’ Next 7 winners – 5 Tickets each for the film ‘Master’Final RoundWinners:First Prize – Bajaj Pulsar150 Bike + World’s Biggest Fan of Thalapathy Vijay trophySecond Prize – 8 Gram Gold Coin + 5 Tickets for the film ‘Master’Third Prize – 4 Gram GoldCoin + 5 Tickets each for the film ‘Master’An introductory program on the game show will be on Live stream on 16th September (Wednesday) at 6 pm in boththe YouTube channels (Valai Pechu and Cinema Central) and Twitter Handles, forthe benefit of everyone to understand more details about the game show.The game show will be fun and engaging tothe fans of Thalapathy Vijay. The 10 questions will be asked in differentrounds (questions on films, songs, dialogues, audio launch speeches etc.). It is the first ever such Game show beinghosted through Live Stream method to celebrate the millions of Thalapathy Vijayfans and reward them with multiple prizes. If you are the World’s Biggest Fan of Thalapathy Vijay, thisis your Game Show. Go for it. Participate, show how much you Know and Love Vijay and winPrizes.

  Watch the Introduction episode: 16th September(Wednesday) at 6 p.m Live in Valai Pechu and Cinema Central You Tube Channels.

  FirstEpisode: 19th September (Saturday) at 6p.m Live in the channels mentioned.

  Don’t Miss the fun!