மிக பெரிய உதாரணம் தமிழ் சினிமாவுக்கும் மட்டும் இல்ல உலக சினிமாவுக்கு சாவல் கொடுக்கும் ஒரு படம் ‘ஜெய் பீம்’
இந்திய நடிகர்களில் யாரும் செய்யாத ஒரு ஒரு விஷயத்தை நடிகர் சூர்யா மிக தைரியமாக செய்துள்ளார். இப்படி ஒரு கதையை கேட்டு அதை சொந்த செலவில் தயாரித்து அதயும் மிக சிறந்த நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்து இருப்பது நமக்கு பெருமையான விஷயம். நம் தமிழ் சினிமாவுக்கு சூர்யா ஒரு பொக்கிஷம் அகரம் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் சூர்யா இந்த படம் மூலம் குறிப்பிட்ட சமுகத்து மிக பெரிய அந்தஸ்தை உண்டுபன்னியுள்ளார் .
இயக்குனர் தா.செ.ஞானவேல் மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார். இவர் ஆனந்த விகடன் பத்திரிக்கையாளர். இவர் தான் இந்த உண்மை சம்பத்தை கதைக்களமாக்கி படமா உருவாக்கியவர். இவரும் இந்த சினிமாவுக்கு மிக பெரிய பொக்கிஷம் ஒரு படம் பொழுதுபோக்கு மட்டும் இல்லை சமுகத்துக்கு சிறந்த கருத்தை ஜனரஞ்சகமாகவும் கொடுக்க முடியும் என்பதை நிருபித்துள்ள ஒரு படம்.
‘ஜெய் பீம்’
படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நிச்சயம் விருதுகள் குவியும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை குறிப்பாக சூர்யா ராஜகன்னாக நடித்த மணிகண்டன் செங்கிநியாக நடித்த லிஜாமோல் ஜோஸ் போன்றவர்களுக்கு மற்றும் இயக்குனருக்கும் விருது நிச்சயம்
‘ஜெய் பீம்’.
காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவார மக்கள் மற்றும் அவர்களது சமூகத்தினரின் மீது சுமத்தி வழக்குகளை முடிக்கின்றனர். காவலர்களால் பாதிக்கப்பட்ட மலை அடிவார மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி தீர்ப்பை வழங்குகிறார், நாயகன் சூர்யா.
1990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் தா.செ.ஞானவேல்.
செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடி வாழ்ந்து வருகிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். சூர்யாவால் தீவிரமாகச் சித்தரிக்கப்பட்டு, பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காகச் சத்தியத்தை வெளிக்கொணர எப்படி முரண்பாடுகளையும் சமாளித்தார் என்பது தான் ‘ஜெய் பீம்’ படத்தின் கதையாகும்.
இதில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
படத்தின் கதை., சூரியாவின் நடிப்பு அற்புதமான படைப்பு ‘ஜெய் பீம்’