ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த ராஜ் டிவி இயக்குனர்களின் ஒருவரான ரவீந்திரன்!?

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த ராஜ் டிவி இயக்குனர்களின் ஒருவரான ரவீந்திரன்!?

தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். 

இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட பிரபல சின்னத்திரை நிறுவனத்தின் புகார் காவல் துறைக்கும் மற்றும் பல அரசு துறைகளுக்கும் போக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சின்னத்திரை வட்டார ஹாட் நியூஸ்.  

அதாவது பிஏ என்ற பாரதி அசோசியேட் நிறுவனத்தின் சேர்மன் டிஆர்எம். இந்த நிறுவனத்தின் மூலம் கிட்டத்தட்ட 2000 சின்னத்திரை நாடகங்களை தயாரித்து பல சேனல்களுக்கு அளித்துள்ளார். தான் தயாரித்த நாடகங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அன்றைய தினமே சம்பளத்தை கொடுத்துவிடும் மிக உன்னதமான பழக்கத்தை கடைபிடித்து வருபவர் தான் டிஆர்எம் என்கிற T .R .மாதவன் . அதுமட்டுமல்ல, தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது பலருக்கு கல்வி ,கல்யாணம், மருத்துவம், என தேவைப்பட்ட உதவிகளை செய்வார். இதுமட்டுமா 3 மாத போனஸ், இன்சென்டிவ்,மாதத்திற்கு ஒரு டூர் என அவர்களை தம் குடும்பத்தினர் போல பார்த்துக்கொள்வார்.

மற்றவர்களுக்கு உதவி செய்தே சந்தோஷப்பட்ட அவர், 2013 இல் அறிமுகமான நபர் ஒருவரின் நட்பு, தன்னை அதலபாதாளத்தில் கொண்டுபோய் விட போகிறத