தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 14ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல வெற்றித் தொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இவர் சத்யராஜ் நடித்த ஐய்யர் ஐ.பி.எஸ் படத்தை இயக்கியதுடன் சத்யராஜ், செந்தில், டி.பி.கஜேந்திரன் நடித்த பொள்ளாட்சி மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்கியுள்ளார். இவரை எதிர்த்து எட்வர்டு ராஜ் என்கிற தளபதி போட்டியிடுகிறார் மற்றும் செயலாளர் பதவிக்கு சுகி மூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து C. ரங்கநாதன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு தமிழ் பாரதி ராஜன் போட்டிருக்கிறார். இவரை எதிர்த்து அருந்தவராஜா போட்டியிடுகிறார் மற்றும் 2 துணைத் தலைவர் பதவிக்கும் 2 இணைச் செயலாளர் பதவிக்கும் 8 செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் பலர் போட்டியிடுகிறார்கள்.