தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’

தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’

‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர் சித்தார்த் நீலகண்டாவாக சாய் ராம் ஷங்கர் நடிக்கும் இத்திரைப்படத்தில், நான்கு மர்மக் கொலைகளையும், சில தனிப்பட்ட இழப்புகளையும் அவர் எதிர்கொள்கிறார். அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை.

வினோத் விஜயன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஓ மை பிரண்ட்’ புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைக்கிறார்.

தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் திரைப்படத்தை இயக்குநர் வினோத் விஜயன், எஸ் ஆர் எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

நடிகர்கள்: சாய் ராம் ஷங்கர், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால், சமுத்திரக்கனி, கலாபவன் மணி, சுதாகர், சுஜித் ஷங்கர், ஷிவா, ஜாலி, ராம்ஷாத், பல்லவி கௌடா, பானுஸ்ரீ, கல்பலதா

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: வினோத் விஜயன்

தயாரிப்பாளர்கள்: வினோத் விஜயன், ரவி பச்சமுத்து, கர்லபட்டி ரமேஷ்

தயாரிப்பு நிறுவனம்: வினோத் விஜயன் ஃபிலிம்ஸ்

இணை தயாரிப்பு நிறுவனம்: ஏக் தோ தீன் புரொடக்‌ஷன்ஸ்

ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி, சுரேஷ் ராஜன், வினோத் இளம்பள்ளி, பப்பு

இசை: ராகுல் ராஜ்

பின்னணி இசை: கோபி சுந்தர்

படத்தொகுப்பு: கார்த்திக் ஜோகேஷ்

தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன்

பாடல்கள்: ரெஹ்மான்

ஒப்பனை: பட்னம் ரஷீத், பட்னம் ஷா

சண்டைக் காட்சிகள்: டில்லி பாபு

உடைகள் வடிவமைப்பு: மஷார் ஹம்சா, மெல்வின்

ஒலி அமைப்பு: தனுஷ் நாயனார், கார்த்திக் ஜோகேஷ்

விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிரோ ஃபிலிம் ஸ்டூடியோ

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

பாடகர்கள்: சித் ஸ்ரீராம் & மது பாலகிருஷ்ணன்