தளபதி 64 -ல் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்!

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு  ஆகியோர் நடிக்கின்றனர் .

தற்போது நடிகை மாளவிகா மோகனன் தளபதி 64 படத்தில் இணைந்து நடிக்கிறார் . இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ‘பியாண்ட் தி கிலவுட்ஸ்’ மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மெகாஹிட் படமான பேட்ட ஆகிய படங்களில் நடித்துள்ளார் . மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !