நிசப்தம் படத்துக்காக ஒரு ஆதரவற்றோர் இல்லம் குறித்த கனவு ஒரு பள்ளியின் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பதை இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் பகிர்ந்து கொள்கிறார்.

நிசப்தம் படத்துக்காக ஒரு ஆதரவற்றோர் இல்லம் குறித்த கனவு ஒரு பள்ளியின் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பதை இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் பகிர்ந்து கொள்கிறார்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய வெளியீடான நிசப்தம் திரைப்படம் தனித்துவமான கதையையும் இதற்கு முன் பார்த்திராத நடிகர் குழுவையும் கொண்டுள்ளது. இந்த படத்தில் ஆதரவற்றோர் இல்லம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது, அது அனுஷ்காவின் குழந்தைப் பருவம் மற்றும் அவர் அங்கு எப்படி வளர்ந்தார் உள்ளிட்ட விஷயங்களுக்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. இவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் ஹேமந்த மதுர்கர் அந்த ஆதரவற்ற இல்லத்தை தேடியது எத்தனை சவாலாக இருந்தது என்பதையும், பின்னர் அந்த கனவு ஒரு பள்ளியின் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பதையும் பகிர்கிறார்.
இது குறித்து இயக்குநர் கூறும்போது, “எனக்கு ஒரு பழங்கால ஆதரவற்றோர் இல்லம் தேவைப்பட்டது ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் பெருமளவில் ஆதரவற்றோர் இல்லங்கள் இல்லை, அப்படி இருந்தவையும் மிகவும் சிறியதாக இருந்தன.” என்கிறார்.
ஒரு இயக்குநராக தன்னுடைய நோக்கத்தை பற்றி கூறும்போது, “என்னுடைய படத்தின் காட்சிகளில் ஒரு மிகப்பெரிய பழங்கால ஆதரவற்றோர் இல்லத்தை காட்ட விரும்பினேன். படத்தில் நான் காட்டியது உண்மையில் ஒரு பள்ளிக்கூடம்” என்கிறார்.
இறுதியாக இந்த ஒட்டுமொத்த செயல்பாடும் எப்படி ஒரு கூட்டுமுயற்சி முறையில் செயல்படுத்தப்பட்டது என்பதை பற்றி இயக்குநர் கூறும்போது, “நான் பள்ளி முதல்வரை அழைத்து அவர்களிடம் அந்த பள்ளிக்கு வந்து படப்பிடிப்புக்காக பார்க்கலாம என்று வேண்டுகோள் வைத்தேன். பள்ளியின் முதல்வர் எங்களுக்கு மிகவும் ஒத்துழைத்தார். அவர்கள் எங்களை அழைத்தனர். படத்துக்காக நான் தேடிக் கொண்டிருந்த இடம் அதுதான். இப்படித்தான் எங்களுக்கு அது கிடைத்தது. இதற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.” என்று கூறுகிறார்.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டிஜி விஷ்வா பிரசாத் தயாரித்துள்ள நிசப்தம் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அமெரிக்க நடிகரான மைக்கேல் மேட்சென் முதல் முறையாக இந்திய படமொன்றில் அறிமுகமாகிறார். இவர்களோடு ஷாலினி பாண்டே, சுப்பராஜு, ஸ்ரீனிவாஸ் அவஸராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது.