பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு.பாக்யராஜ் அவர்களால் வெளியிடப்பட்ட சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் இசைவெளியீடு….

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு.பாக்யராஜ் அவர்களால் வெளியிடப்பட்ட சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் இசைவெளியீடு….

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து, ஊடக பேட்டியும் முடிந்த நிலையில் இப்படம் திரைக்கு பிப்ரவரி 5 திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் இசையானது நேற்று பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு. பாக்யராஜ் அவர்களால் வெளியிட்டுள்ளது.. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாதால் இப்படத்தின் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். ஒளிப்பதிவை R.வேல் ஏற்றுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை மார்ட்டின் கையாண்டுள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது