மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் விமர்சனம்

இப்பொழுது பல திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளயாகியுள்ளது.

இந்த படம் PPV(Pay per view) என்ற கட்டண முறையில் ஜீ ப்ளெக்ஸில் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் விருமாண்டி இயக்கியிருக்கும், க/பெ ரணசிங்கம் படத்தின் கதையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முன்னால் வந்து குரல் கொடுக்கும் வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கு.

அப்படி இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷுடன் காதல் மலர்ந்து திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார் விஜய் சேதுபதி.

துபாய் செல்லும் விஜய் சேதுபதி, அங்கு பல இன்னல்களை சந்திக்கிறார். அதுமட்டுமில்லாமல் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்களின் இன்னல்களை இப்படம் மிக தெளிவாக காட்டியுள்ளது.

அங்கு சிக்கி இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் விஜய்சேதுபதியை மீட்டெடுக்கும் வீர மங்கயாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவரைக் காப்பாற்ற ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அவர் படுகள், பல பெண்களின் கண்ணீர் கதைகளை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்நிலையில் தனது கணவரை வெளிநாட்டிலிருந்து காப்பாற்றி கொண்டு வந்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? விஜய் சேதுபதிக்கு என்ன நடந்தது? என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டி சிறந்த திரைப்படத்தை படைத்துள்ளார் இயக்குனர் விருமாண்டி.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் வரும் இசையமைப்பாளர்ஜிவி பிரகாஷின் தங்கை பவானி, ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜ் காமராஜா போன்றோரின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் பாதி ஐஸ்வர்யா ராஜேஷ் தரமான நடிப்பு. விஜய்சேதுபதி வழக்கம் போல் நக்கல், நையாண்டி

வெளிநாட்டில் இறந்த தன் கணவனை இந்தியா கொண்டு வர மனைவி படும் வேதனை நன்றாக பதிவு செய்துள்ளார்.

மக்கள் செல்வனின் தனக்கே உரித்தான கிண்டல் கேலி என ரசிக்க வைக்கிறார்

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன் இறந்து விட்டால் அவரின் உடலை நம் நாட்டுக்கு கொண்டுவர எந்த அளவுக்கு வேதனை கஷ்டம் நாம் பட வேண்டும் என்ற உண்மை மிக மிக அழகான ஒருபதிவு

ஒரு மிக சிறந்த படைப்பு உணர்வும் உணர்ச்சி மிகுந்த படைப்பு நிச்சயமாக விருமாண்டி மிக சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் படத்தின் பலம் ஐஸ்வர்யா விஜய் சேதுபதி இவர்கள் இருவரது வெற்றி கூட்டணியில் மீண்டும் ஒரு அருமையான கதை நிச்சயமாக ஐஸ்வர்யாவுக்கு விருது உண்டு. குறிப்பாக கிளைமாக்ஸ் மனதை நெகிழவைக்கும் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதை.