மாநாடு திரைவிமர்சனம்…

சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளியன்று வெளியாக வேண்டிய படம் இன்று பல தடைகளைத் தாண்டி உலகெங்கும் வெளியாகி உள்ளது.

முத்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் 12 வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் தமிழக முதல்வராக வரும் எஸ் ஏ சந்திரசேகர் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது முதல்வரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.

இந்த விஷயம் டைம் லூப்பில் மாட்டிக்கொள்ளும் சிம்புவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில் முதல்வரை சிம்பு காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை விறுவிறுப்பாக செல்கிறது. சிலம்பரசன் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவின் நடிப்பு, வசனம், சண்டை காட்சிகள் என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார். இந்த படம் சிம்புவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷன் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிம்புவுக்கு இணையாக எஸ். ஜே சூர்யா மிக அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக “வந்தான், சுட்டான், போனான், ரிப்பீட்டு” என்று அவர் பேசும் வசனங்கள் ரசிக்க முடிகிறது.

இந்த படத்தில் இன்னொரு பெரிய பலம் என்னவென்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசைதான். படத்தின் சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு அனைத்தும் அருமை. டைம் லூப் கதை என்பதால் அனைவர்க்கும் புரியும்படி வெங்கட் பிரபு படத்தை இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் இந்த ‘மாநாடு’ பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.