*மாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ*
இந்த இனிமையான பாடலை பாடகி நித்யா தனது குரலில் பாடியிருக்கிறார்
சமீபத்தில், ஜனவரி 8, 2021 அன்று, சர்வதேச அளவில், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மாறா திரைப்படம் வெளியானது. இசை சார்ந்த காதல் திரைப்படமான இது பலதரப்பட்ட ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வருகிறது. அதே போல இந்தப் படத்தின் பாடல்கள் பல இசை ரசிகர்களை மயக்கியுள்ளது.
மாறா பாடல்களை ஒவ்வொருவரது காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில், அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒரு அறை உனது பாடல், பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு தனி ஊக்கத்தைத் தந்துள்ளது. இதனால், இந்த அழகியப் பாடலைத் தனது குரலில் பாடிப் பதிவு செய்துள்ளார்.
பாடல் : https://youtu.be/jjjSJZJ-SkQ
இந்த பாடல் காணொலியில் சரியான அரங்க அமைப்பு, சூழல் உள்ளிட்ட பல விஷயங்கள் கச்சிதமாக அமைந்துள்ளன. இந்த வாரத்தை நீங்கள் இனிமையாகத் தொடங்க உகந்த காணொலியாக இது இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தாமரை வரிகள் எழுத, யாஸின் நிஸார் மற்றும் சனா மொய்துட்டி இந்தப் பாடலை பாடியிருந்தனர். மாறா மற்றும் பாருவின் அழகிய, கலைநயமிக்க உலகத்துக்கு ஒரு சின்ன கண்ணோட்டத்தை இந்தப் பாடல் தருகிறது.
மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, திலீப் குமார் இயக்கத்தில், ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா, ப்ரமோத் ஃபிலிம்ஸ் சார்பாக மாறாவைத் தயாரித்துள்ளனர். ஜனவரி 8, 2021 அன்று, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், 240 தேசங்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ் மற்றும் அபிராமி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படமாகக் கருதப்படும் மாறாவை, நீங்கள் இன்னும் பார்க்கவில்லையென்றால், இப்போதே அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பார்த்து மகிழுங்கள்.