மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை 5 இந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிடுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை 5 இந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிடுகிறது.

முந்தைய உலகளாவிய பிரீமியர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 அற்புதமான திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது.

வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்ட நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்), இந்த படங்கள் 2020 அக்டோபர் 15 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.

 

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்- அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில்விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின்விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக
பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு 129 ரூபாயில் அல்லது வருடத்திற்கு 999 ரூபாயில் பெறலாம்.

 

மும்பை, இந்தியா, அக்டோபர் 9 2020: அமேசான் ப்ரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை நேரடியாக ஸ்டீரிமிங் செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளது. 5 இந்திய மொழிகளில், மாறுபட்ட அம்சங்களை உடைய, வருண் தவான் நடிக்கும் (ஜட்வா 2, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி) மற்றும் சாரா அலி கானின் (சிம்பா), ராஜ்கும்மர் ராவ் (டிராப்ட், ஸ்ட்ரீ) மற்றும் நுஷ்ரத் பருச்சாவின் ( சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி), பூமி பெட்னேகரின் துர்காவதி (சுப் மங்கல் சவ்தான், டாய்லெட்: ஏக் பிரேம் கதா), அரவிந்த் ஐயர் நடித்த பீமா சேனா நளமகாராஜா (கன்னடம்), ஆனந்த் தேவாரகொண்டா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), ஆர். மாதவனின் மாரா (தமிழ்). மற்றும் வர்ஷா போலம்மா (பிகில்) நடித்த மன்னே நம்பர் 13, சேதன் கந்தர்வா (மெலடி) இவைகள் அனைத்தும் முன்னர் அறிவிக்கப்பட்ட சகாரியா முகமதுவின் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) மற்றும் சூர்யா நடித்த சூரரை போற்று (தமிழ்), சேதன் கந்தர்வா (மெலடி) நடித்த மன்னே எண் 13 (கன்னடம்) படங்களும் வெளிவருகின்றன. இந்த திரைப்படங்கள் 2020 க்குள் உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக திரையிடப்படும்.

முதல் கட்டமாக 5 மொழிகளில் 10 படங்களை நேரடி சேவையில் அறிமுகப்படுத்துகிறது, இது அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா முழுவது 4000 க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களான பென்குவின், பொன்மகள் வந்தாள், லா, பிரெஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாயும், சி யு சூன், வி மற்றும் நிஷப்தம் போன்றவை சொந்த மாநிலங்களைத் தவிர்த்து வெளிமாநிலங்களான லக்னோ, கொல்கத்தா, புனேவிலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றன. 180 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள தொலைக்காட்சி பார்வையாளர்களால் இந்த திரைப்படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு ரசிக்கப்பட்டன, ப்ரைம் வீடியோவின் உலகளாவிய பிரீமியர்கள் இந்திய தயாரிப்பாளர்களை இன்னும் அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய வைத்தது. ப்ரைம் வீடியோ இந்தியாவில் வெளியிட்ட இந்தி படங்களான குலாபோ சிட்டாபொ & சகுந்தலா தேவி ஆகியவை வெளியிடப்பட்ட நாளிலிருந்து அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களாக இருக்கின்றன. குலாபோ சிட்டாபொ மற்றும் சகுந்தலா தேவி ஆகிய இரண்டு படங்களும் உலகளவில் பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தி திரைப்படங்கள்!

“நல்ல கதைகளுக்கு எல்லை என்பதே கிடையாது. பார்வையாளர்கள் எப்போதும் சிறந்த பொழுதுபோக்கைத் தான் விரும்புவார்கள், மற்றும் நல்ல கதைகள் எப்போதுமே பார்வையாளர்களின் பாராட்டைப் பெற தவறாது. எங்கள் நேரடி சேவையில் வெளியான திரைப்படங்களின் வெற்றியே இதற்கு ஒரு சான்றாகும். இது எங்களை வாடிக்கையாளர்களுக்கு நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கொடுக்க ஊக்குவிக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோ, இந்தியா கண்டெண்டின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், நேரடி சேவையில் எங்களது முந்தைய வெளியீடுகள் 180 நாடுகளில் பார்க்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த இந்த மகத்தான வரவேற்பிற்காக மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த 9 வெளியீடுகளை 5 மொழிகளில் கொண்டுவருவதில் உற்சாகமாக இருக்கிறோம்.”

 

“இந்தியாவில் படங்கள் பார்க்கப்படும் முறையில் நேரடி டிஜிட்டல் வெளியீடுகள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. படங்கள் நாடு முழுவதும் அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய அமேசான் ப்ரைம் வீடியோ உதவுவதோடு மட்டுமல்லாமல், 200+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து உருவான உலகத் தரம் வாய்ந்த படங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் இயக்குனர் கவ்ரவ் காந்தி கூறினார். எங்களின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள டிஜிட்டல் வெளியீடுகளுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அந்தந்த சொந்த மாநிலங்களை தவிர்த்து வெளிமாநிலத்தை சேர்ந்த பார்வையாளர்கள் தான். நல்ல கதைகளை டிஜிட்டலில் வெளியீடுவதால் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். எங்கள் புதிய வெளியீடுகளுக்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்”

அமேசான் பிரைம் வீடியோவின் நேரடி டிஜிட்டல் வெளியீடுகள்:

ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) , இது அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 15 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

சகாரியா முகமது இயக்கத்தில் வரவிருக்கும் மலையாள நகைச்சுவைத் திரைப்படமான ஹலால் லவ் ஸ்டோரியில் இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், ஷரஃப் யு தீன், கிரேஸ் ஆண்டனி மற்றும் சவுபின் ஷாஹிர், பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பீமா சேனா நளமஹராஜா (கன்னடம்)அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 29 ஆம் தேதி திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சரகூர் இயக்கிய கன்னட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தான் பீமா. இப்படத்தில் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண், பிரியங்கா திம்மேஷ், ஆச்சியுத் குமார் மற்றும் ஆத்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சூரரை போற்று (தமிழ்), அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 30 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் அதிரடி/டிராமா தமிழ் மொழி படம் தான் சூரரை போற்று. சூர்யா கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரலி, பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை சூரியாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்கியா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” புத்தகத்தின் கற்பனையான பதிப்பாகும்.

சலாங் (இந்தி), நவம்பர் 13 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜ்கும்மர் ராவ், நுஷ்ரத் பாருச்சா நடிப்பில் ஹன்சல் மேத்தா இயக்கிய ஒரு உயிர்ப்பூட்டும் சமூக நகைச்சுவை தான் இந்த சலாங். இதை பூஷன் குமார் வழங்க அஜய் தேவ்கன், லுவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

மன்னே நம்பர் 13 (கன்னடம்), அமேசான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 19 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

விவி கதிரேசன் இயக்கத்தில், திரில்லர் படமாக மன்னே நம்பர் 13 இருக்கும். கிருஷ்ணா சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வர்ஷா போலம்மா, ஐஸ்வர்யா கவுடா, பிரவீன் பிரேம், சேதன் காந்தர்வா, ரமணா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 20 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வர்ஷா போலம்மா ஆகியோரின் நடிப்பில், மிடில் கிளாஸ் மெலடிஸ் ஒரு ஹோட்டலை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவோடு கிராமத்தில் நடுத்தர வாழ்க்கையை வாழும் இளைஞனின் வாழ்க்கையை நகைச்சுவையாக சித்தரிக்க்கிறது. இப்படத்தை வினோத் அனந்தோஜு இயக்குகிறார்.
துர்காவதி (இந்தி), அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 11 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அசோக் இயக்கத்தில் பூமி பெட்னேகர் நடித்த துர்காவதி, இது பெரியசக்திகளின் சதித்திட்டத்திற்கு பலியாகும் ஒரு அப்பாவி அரசாங்க அதிகாரியின் கதையைச் சொல்கிறது. இப்படத்தை டி-சீரிஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் அபுண்டாண்டியா எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கின்றன.
மாரா (தமிழ்), பிரைம் வீடியோவில் டிசம்பர் 17 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது

திலீப் குமார் இயக்கத்தில் தமிழ் மொழி ரொமாண்டிக் டிராமாவாக இந்தப் படம் இருக்கும். பிரமோத் பிலிம்ஸின்ஸ்ருதி நல்லப்பா மற்றும் பிரதீக் சக்ரவர்த்தி ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

 

 

கூலி நம்பர் 1 (இந்தி), அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 25 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

பூஜா என்டர்டெயின்மென்ட்டின் பிரபலமான கூலி நம்பர் 1-ஐ தழுவி எடுக்கப்பட்ட ஒரு குடும்ப நகைச்சுவை படம் தான் இது. நகைச்சுவை மன்னர் டேவிட் தவான் இயக்கியுள்ளார். இப்படத்தில் வருண் தவான், சாரா அலி கான், பரேஷ் ராவல், ஜாவேத் ஜாஃப்ரி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் இந்த புதிய வெளியீடுகளும் சேருகின்றன. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், தி ஃபர்காட்டன் ஆர்மி – ஆசாதி கே லியே, ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2, தி ஃபேமிலி மேன், மிர்ஸாபூர், இன்சைட் எட்ஜ் சீசன் 1 மற்றும் சீசன் 2 மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவற்றுடன் இந்திய படங்களான குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரெஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த
சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் இந்த புதிய வெளியீடுகளை எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில்அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு
ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-ல் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.