முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது  மகன் சூர்யாஇணைந்து நடித்துள்ள   “ சிந்துபாத் “

கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “

இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா     ஆகியயோர் நடித்துள்ளனர்.

இசை  – யுவன்சங்கர் ராஜா

ஒளிப்பதிவு  –  விஜய் கார்த்திக் கண்ணன்

எடிட்டிங்  –  ரூபன்

கலை – A.R,மோகன்

பாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா.

ஸ்டன்ட்  – பிரதித் சீலம், ஹரி தினேஷ்

நடனம்  –  ஷெரிப்

மக்கள் தொடர்பு  – மௌனம்ரவி

தயாரிப்பு – கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன்.

கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S U.அருண் குமார்

நானும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றும் மூன்றாவது இது. இதற்கு முன் இணைந்து பணியாற்றிய பண்ணையாரும் பத்மினியும்,  சேதுபதியும் மக்களால் பாராட்டப்பட்டது குறிப்படத்தக்கது. முதல் முறையாக ,  இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரும் அளவிற்கு ரசிகர்களை கவரும்.

சூரியாவும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் தந்தை மகனாக நடிக்க வில்லை என்றாலும்  அவர்களுக்கு இடையே உள்ள உறவினில் ஒரு தனித்துவமான உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும்.

விஜய் சேதுபதி முழு காது கேட்கும் திறன் இல்லாத திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னும் சொல்ல போனால், அவரை சுற்றி தான் கதை நகர்கிறது.

லிங்கா இப்படத்தின் வில்லனாகநடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் பெரும் முயற்சி எடுத்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு  பெரும் பகுதி தாய்லாந்து, மலேஷியா, கம்போடியா மற்றும் தென்காசியில் நடைபெற்றுள்ளது. படத்தில் நிறைய சுவாரஸ்யமான சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை கலைஞர் பிரதித் சீலம் (எ) நுங் படமாக்கியுள்ளார்.

படம் வருகிற 21 ம்  தேதி  உலகமுழுவதும் வெளியாக உள்ளது என்றார் இயகுனர் S U.அருண் குமார்.