ரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு !

படத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சர்யங்களையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கும்
“அக்னி சிறகுகள்” படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இடங்களுக்கு படம்பிடிப்பிற்காக  பறந்திருக்கிறது. தங்களது அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கு துவங்கவுள்ளது.

“அக்னி சிறகுகள்” படத்தின் நடிகர்குழு  விஜய் ஆண்டனி ,  அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், J சதீஷ் குமார், செண்ட்ராயன்  இயக்குநர் நவீன் உட்பட படக்குழு அனைவரும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக  ரஷ்யாவை சென்றடைந்துள்ளனர்.

படப்பிடிப்பு குறித்து இயக்குநர் நவீன் தெரிவித்ததாவது…

எங்களது படத்தின் இரண்டாம் கட்டப்பிடிப்பை ரஷ்யாவில்  துவங்கவுள்ளோம். இங்கு படத்தின் முக்கியமான பகுதிகளும்,  படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம். கடந்த மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி தங்களது மற்ற படங்களிள் பிஸியாக இருந்தார்கள். மேலும்  ரஷ்யாவின்  மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் படத்திற்கான தகுந்த லோகேஷன்களை நாங்கள் தேடினோம். எங்களது படத்திற்கான மிகச்சிறந்த லோகெஷன்கள் இங்கு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் எங்கள் படக்குழுவிற்கு இவ்வளவு காலத்தையும் கடந்து ஆதரவு தந்ததற்கு தயாரிப்பாளர் T சிவா சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்த ஊக்கமும் ஆதரவும் தான் இப்படம் இந்த அளவு தரமாக உருவாவதற்கு காராணம். இங்கு  இரண்டாம் கட்டப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஷாலினி ஃபாண்டே,  அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் உடபட பல முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள். K S பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஆரம்பம் முதலாக எதிர்ப்பர்ப்பின் உச்சத்தில் இருக்கும் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் T. சிவா தயாரிக்கிறார்.

 
Cast & Crew

Cast & Crew

Producer  : T. Siva
Production Company : Amma Creations
Director : Naveen
Starring : Arun Vijay, Vijay Antony, Shalini Pandey ,Akshara Haasan,Prakash Raj , J Satish Kumar, Sendrayan
Cinematography : K.A. Batcha
Music Director : Natarajan Sankaran