விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”

விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் “சோழ நாட்டான்” படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”

களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்” இதினை பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக “Bangari Balaraju” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் “SD”, ” Itlu Mee SriMathi” மற்றும் “Uttara”,  போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப  பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன் இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.. ஒளிப்பதிவு “பிரகாஷ்”. பாடல்கள். “கலைக்குமார்”,  “மணி அமுதவன்”, “சபரீஷ்”, ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கிறார்.எழுதி இயக்குகிறார் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா””