விரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

விரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!
——————————
தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள்.
இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொதுமுடக்க காலம் ஜூலை 23தேதி அன்று 115 வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க அனாதைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல். தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45 வது பிறந்தநாள் ஜூலை 23ல் வருகிறது .அதற்கு தங்களது தொண்டின் மூலமும் சேவை மூலமும் அசத்த வேண்டும் என்று கருதி அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி ஜூலை 23 , சென்னையில் 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் வழக்கமாக உணவு வழங்கப்படுகிறது. இப்படி சூரியாவின் 45வது பிறந்த நாளை சேவையின் ஈரத்தோடு கொண்டாடுகிறார்கள்.

சேவை மூலம் இப்படி மன திருப்தி அடையும் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப்போற்று’ படம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். விரைவில் வர இருக்கும் அந்த படத்தின் டீஸரும் பாடல்களும் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளியி ருக்கின்றன.

‘வெய்யோன் சில்லி…’ பாடலும், ‘மண்ணுருண்டை…’ பாடலும் பெரிய வெற்றி பெற்றுவிட்டன .’ சிஎன் சிறுக்கி கிட்ட சீவனத் தொலைச்சிட்டேன்’ வரிகளும் ‘பருந்தாகுது ஊர்க்குருவி;
வணங்காதது என் பிறவி’ வரிகளும் ரசிகர்களின்
அன்றாட முணுமுணுப்புகள் ஆகிவிட்டன. டீஸரும் வெளியாகி அதிரிபுதிரி மில்லியன்கள் வெற்றியில் எகிறிக் கொண்டிருக்கிறது.
விரைவில் வெளிவரயிருக்கும் மூன்றாவது பாடலான ‘ காட்டுப்பயலே…’ பாடலின் முன்னோட்டமாக , ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ தயாராகிவருகிறது. இது, சூரியாவின் பிறந்தநாள் ஜூலை 23 காலை 10மணிக்கு ,
உலக சூரியா ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வெளியிடப்படுகிறது.

2D என்டர்டெய்ன்மென்ட், சிக்யா என்டர்டெய்ன்மென்ட் உடன் இணைந்த தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி .பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள – சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்திற்காகத் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். விரைவில் நாட்டில் சுமுகம் நிலவும்; படம் திரையில் பரவும்.
Soon the third song of ‘Soorarai Pottru’.

Preview of One minute special video on Surya’s birthday on July 23!

Like their favorite actor Surya, his fans are also focused on social activities.
Even during this corona lockdown, Surya’s fans have been doing things without the fuss of advertising.

The continuing corona lockdown extension falls on July 23rd is the 115th day. All these days the fans of Surya Rasigar Mandram have been feeding the orphans and the helpless people all over Tamil Nadu. That too without sounding. Their star actor Surya’s 45th birthday is coming up on July 23. They are planning to do it with their charity and service. Accordingly, on July 23, food will be provided to 45 orphan’s homes in Chennai. And food is regularly served throughout Tamil Nadu. Thus, Surya’s 45th birthday is celebrated with their service.

Fans who are so satisfied with the service are eagerly waiting for the release of ‘Soorarai Pottru’ starring Surya. The teaser and songs of the upcoming film have been released and are garnering millions of views.

‘Veyyon Silli ‘ and ‘Mannurundai’ songs are already a big hit. ‘Seeyen sirukki kitta seevana tholachitten, ‘Parunthaaguthu Oorkurivi. Vanangathathu en piravi’ these lines have attracted fans a lot and they used to murmur them everyday.

The teaser has also been released and is raking in millions of hits. A one minute special video is being prepared as a preview of the upcoming third song ‘Kattupayale’. This is releasing on Surya’s birthday on July 23 at 10 am, to entertain world wide Surya fans.

Fans are eagerly waiting for ‘Soorarai Pottru’ movie on which 2D Entertainment has teamed up with Sikhya Entertainment to produce this film directed by Sudha Kongara and music is composed by GV Prakash Kumar. Soon the situation will become normal; Movie will hit the screens soon.