விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘இரண்டாம் நகர்வு’
வி.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் நகர்வு’. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான
இப்படத்தை இயக்கி தயாரித்திருப்பதோடு, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் வினோத் சிரஞ்சீவி. ஆஞ்சல் , கெனிஷா பிராஞ்சீஸ் மற்றும்
ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் குறிஞ்சி, மது, அவினாஷ், அரவிந்த், பிளஸ்ஸி, நிவேதா ஆகியோர்
முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நண்பர்கள் நடத்தும் விருந்து நிகழ்வில் கொலை ஒன்று நடக்கிறது. அந்த கொலை பற்றிய விசாரணையில் ஈடுபடும் விசாரணை
அதிகாரிகளான கதாநாயகன் வினோத் சிரஞ்சீவி மற்றும் கதாநாயகி கெனிஷா பிராஞ்சீஸ், அந்த கொலையின் பின்னணி என்ன? யார்
கொலை செய்தது? ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், சஸ்பென்ஸ் மற்றும்
திரில்லரான காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக மிக நேர்த்தியாக உருவாகியிருப்பதோடு, ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக,
கூறிய இயக்குநர் வினோத் சிரஞ்சீவி, முழுமையான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக ‘இரண்டாம் நகர்வு’ ரசிகர்களை
திருப்திப்படுத்தும், என்றார்.
வினோத் சிரஞ்சீவி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பி.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷ் இசையமைக்க செந்தில்
படத்தொகுப்பு செய்துள்ளார். ஆதித்யா இணை தயாரிப்பை கவனிக்க, இணை இயக்குநராக எஸ்.ஆர்.மணிகண்டன் பணியாற்றியுள்ளார்.
மக்கள் தொடர்பாளராக சரவணன் ஹஸ்வத் பணியாற்றுகின்றனர்.
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கியமான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி
திரையரங்குகளில் வெளியாகிறது.
9th April Movie Release
Cast :
Vinodh chiranjeevi
Aanchal yadav
Kenisha francis
Kurinji
Madhu
Avinash
Aravind
Blessy
Nivedha