ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, மிகப் பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று –

ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, மிகப் பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று – காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நடுவர் கார்த்திக் குமார்
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, அமேசானின் அசல் தயாரிப்பு காமிக்ஸ்தானின் தமிழ் பதிப்பான காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகியுள்ளது.
உள்ளூர் பாணியை மேடையேற்றியிருக்கும் இந்த நிகழ்ச்சி ஸ்டான்ட் அப் காமெடி உலகில் ஒரு குறிப்பிட்ட புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. இது பற்றி பேசியிருக்கும் நடுவர் கார்த்திக் குமார், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், தொடர்பு குறித்தும் பேசியுள்ளார்.
“மிகப் பாரம்பரியமான, பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று தான் ஸ்டான் ட் அப் காமெடி என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும். நீங்கள் கவனித்தால் தெரியும், சாக்கைக் கூத்து இன்றும் பலரால் பயிற்சி செய்யப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு பாரம்பரிய கலை வடிவம். அதற்கு இணையான நவீன வடிவம் தான் ஸ்டான்ட் அப் காமெடி. இது எல்லாருக்கும் தெரியாது.
இன்றைய காலகட்டத்தில் இந்த வகை பொழுதுபோக்கை செய்து வருவதில், நகைச்சுவையாளர்கள் நாங்கள் அதிகப் பெருமை கொள்கிறோம். நகைச்சுவையை விரும்புபவர்கள் இன்னும் இந்த பாணி குறித்து தெரிந்து கொள்ள, திறமைகளை பாராட்ட எங்கள் நிகழ்ச்சி உதவும் என்று நம்புகிறேன்” என்கிறார் கார்த்திக் குமார்.
ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சி. இந்த புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவை பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர்கள் தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாகவோ அல்லது ராணியாகவோ தேர்வாகப் போட்டியிடுவார்கள்.
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சி, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான நுணுக்கங்களை இரவல் பெற்று, உள்ளூர் ரசனையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் அவருக்கான பிரத்யேக பாணியில் நகைச்சுவை செய்யவுள்ளார்கள். தமிழின் 6 சிறந்த நகைச்சுவையாளர்கள் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பாவின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போடும் போட்டிக்கான முன்னோட்டத்தை ட்ரெய்லர் காட்டியது.
ஒன்லி மச் லவுடர் தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். 11 செப்டம்பர் 2020ஆம் தேதி முதல், காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளை, அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள்.

*”Stand- up comedy is one is the most traditional and oldest forms of comedy”, Judge Karthik of Comicstaan Semma Comedy Pa*

Amazon Prime Video’s Comicstaan Semma Comedy Pa, a much-awaited Tamil adaptation of audiences’ favorite Amazon Original Series Comicstaan finally released on 11th September. Bringing a new local flavour, the show marks a significant step in the world of stand-up comedy. Talking about the same, Judge Karthik Kumar explains the relevance and importance of the show.

Karthik shares, “Very few people know that stand up comedy is one is the most traditional and oldest forms of comedy. If you check, Chakyar Koothu is still widely practiced and enjoyed. It is a traditional artform and its modern equivalent is, stand-up comedy. And, not everyone knows that! We, comedians feel extremely proud to practice this form of entertainment in today’s times! I believe, our show will further help people who love comedy to learn more about the genre and appreciate the talents”.

The launch of the series marks Prime Video’s foray into Original content in Tamil language. In the all-new series, Tamil’s top three comedians Praveen Kumar, Karthik Kumar and Rajmohan Arumugam, experts in their respective genres of comedy, mentor selected contestants who will compete to become the king or queen of comedy in the Tamil stand-up scene in these 8 episodes.

Comicstaan Semma Comedy Pa is expected to bring forth the local flavour – borrowing from the unique nuances of Tamil culture, with exclusive sets performed by each of the participants. The trailer gives a sneak peek into an all-new edition where six of Tamil comedy’s best contestants will compete for the winning title of Comicstaan Semma Comedy Pa.

Produced by Only Much Louder (OML), Comicstaan Tamil has been directed by Arjun Karthikeyan and written by D. Jai Adhitya and Mervyn Rozario A are the writers of the series. Watch all episodes of Comicstaan Tamil as streams exclusively on Amazon Prime Video.