ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி சமர்ப்பணம் செய்திருந்தார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்ய திட்டமிட்டு மிக குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக அந்தப் பாடலை எடுத்து முடித்துள்ளார். சுனில் இசையமைப்பில் பிரவீன் பாடல் வரிகள் எழுத சூப்பர் சிங்கர் திவாகர் இந்தப் பாடலை பாடி இருக்கிறார்.

அழகழகான சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பாடலில் ஆசான் பவர்பாண்டியன் என்கிற சிலம்பம் மாஸ்டரும் இணைந்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். திறமையான கலைஞர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு மனநிறைவுடன் ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி உள்ள இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. நம் உள்ளங்களை கவர போகும் இந்தப் பாடல் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.