பட்டிணப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் கொலை,கொள்ளை,போதைப் பொருள் கடத்தும் ரவுடியாக இருக்கிறார் சாண்டி.அதே பகுதியில் ஜெயராம் தனது மனைவி ஊர்வசி,இரு மகள்களான சஞ்சனா, அனந்திகா ஆகியோருடன்,யோகிபாபு இருக்கும் வீட்டின் கீழ்தளப்பகுதி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.சாண்டி தினமும் சஞ்சனாவுக்கும் அனந்திகாவுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.இதை தட்டிக் கேட்க சென்ற ஜெயராமை மிரட்டி அனுப்பிவிகிறார்.இதனால் விரக்தியடைந்த ஜெயராம் தனது மனைவி மகள்களுடன் சாண்டியை என்ன செய்யலாம் என்று ஆலோசணை நடத்துகிறார்கள்.முடிவில் ரவுடி சாண்டியை கொலை செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இவர்களுக்கு உதவியாக ஊர்வசியின் தம்பியான சிங்கம்புலியும் வருகிறார்.இவ்வாறு இருக்கும்போது சாண்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார்.கொலையாளியை கண்டுபிடிக்க காவல்த்துறை ஆய்வாளர் மிஷ்கின் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்குகிறார்.சாண்டி கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஜெயராம் இந்த கொலையை மனைவி ஊர்வசி, அல்லது மகள்கள் சஞ்சனா அல்லது அனந்திகா ஆகியவர்கள்தான் சாண்டியை கொலை செய்திருக்க வேண்டுமென்று சந்தேகப்படுகிறார்.அதேபோல் கணவன் தான் கொலை செய்திருக்க வேண்டுமென்று ஊர்வசி சந்தேகப்படுகிறார்.சஞ்சனாதான் கொலை செய்திருக்க வேண்டுமென்று அனந்திகாவும்,அதேபோல அனந்திகாதான் கொலை செய்திருக்க வேண்டுமென்று சஞ்சனாவும் இப்படி ஒருவருக்கொருவர் சந்தேப்படுகிறார்கள்.உண்மையில் சாண்டியை கொலை செய்தது யார் என்பதே படத்தின் மீதிகதை.
ஜெயராம்,ஊர்வசி,மிஷ்கின்,யோகிபாபு, சாண்டி,சந்தோஷ் சோபன்,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,அனந்திகா சனில்குமார், ஜி.கே.எம்.தமிழ்குமரன்,பூர்ணிமா ஆகியோர் சிறப்பாக நடித்து கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும்,பாக்ஸன் இசையும் கதைக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
இப்படி அதிர்வூட்டுகின்ற ஒரு துப்பறிதல் கதையை கையில் எடுத்து நகைச்சுவையுடன் கூடிய சிறந்த திரைக்கதை அமைத்து, படத்தின் உச்சக்கட்ட காட்சியில் சமுதாய சிந்தனையுடன் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
“பரிமளா அண்ட் கோ” பாராட்டுக்குரியது.
