25.04.2020 பத்திரிகை செய்தி

25.04.2020
பத்திரிகை செய்தி:
உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் திரைபிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இச்சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க 1000 உறுப்பினர்களுக்கு திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சார்பாக மிகுந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த
நிவாரண பொருட்கள் இப்பொழுது சாலிகிராமத்தில் அமைந்துள்ள செந்தில் ஸ்டூடியோ வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்கிறார்கள். சங்கத்தின் மானேஜர் பாலமுருகன் மேற்ப்பார்வையில், நடிகர் சங்க தனி அலுவலர் கீதா கொடுத்துவருகிறார். இதுவரை 350 பேருக்கும் அதிகமான உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் வழங்கிவருகிறார்கள்.

தனித்திரு! விழித்திரு! விலகி இரு.
கீதா,
தனி அலுவலர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்.

குறிப்பு : உறுப்பினர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.