நாயகன் விது விவசாயத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்,ஆனால் விவசாயத்தை விட்டுவிட்டு,சென்னையில் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ப்ரீத்தி அஸ்ராணி விது மீது காதல் வசப்படுகிறார். இருவரும் காதலிக்கிறார்கள்.விது ஊரில் தனது பெற்றோர்களுக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல்,மற்றும் ஊர் பிரச்சனை இவையெல்லாம் அவருக்கு தெரிய வருகிறது.இத்னால் மனக்கவலையில் உணர்ச்சிவசப்படுகிறார்.ஆனால் பிரித்தி அஸ்ராணி விதுமீது அளவுமீறி அன்பு காட்டுகிறார்.தன் குடும்ப பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் விது தனது உயிருக்கும் மேலாக அன்பு காட்டும் காதலியை கண்டு கொள்வதில்லை.ஆனாலும் அன்பு வைத்திருக்கிறார்.அந்த அன்பை பறிமாறிக்கொள்ள விதுவுக்கு நேரம் கிடைப்பதில்லை.இதனால் ப்ரித்தி அஸ்ராணி காதலை முறித்துக் கொள்ளலாம் என்று விதுவிடம் கூறிவிட்டு சென்று விடுகிறார்.பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
விது முதல் படம் என்று தெதியாத அளவுக்கு முதிர்ச்சி பெற்ற நடிகராக திரையில் கதாபாத்திரத்தோடு ஒன்றிபோய் தத்ரூபமாக நடித்து இருக்கிறார்.
ப்ரியா அஸ்ராணி குடும்ப சூழ்நிலைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கின்ற காட்சியில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும் அவினாஷ்,மாஸ்டர் மகேந்திரன், கிரண்,சிந்து சியான்,பிரேம்குமார்,ஆதிரா பாண்டியலட்சுமி,ஆறுமுகவேல்,ஷினாஸ் பாத்திமா,சதிஷ்குமார்,ஷாலினி,பிரியங்கா ராய்,பிரதீப்,அனுஶ்ரீ வேலன் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென் ரோல்டனின் இசையும்,மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
மனிதனின் 29 வயதில் நடக்கும் வாழ்வியலை பற்றி கதையை கையில் எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் ரத்னகுமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
29 வயதில் நடக்கும் ஒரு யதார்த்த வாழ்வியல் இந்த 29
