விருது கிடைத்ததில் ரஜினி மகிழ்ச்சி கொள்ளலாமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் .
திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் தலைசிறந்த நடிகர் அவர்.எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்வில் உழைப்பை நம்பினால் உயரலாம், உயரத்தை எட்டலாம் என்பதற்கு கண்முன்னே நிற்கும் மிகப்பெரிய அடையாளம் நண்பர் ரஜினிகாந்த். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நண்பர்களாய் நாங்களிருவரும் பல ஆண்டுகள் பயணித்து வருகிறோம்.
அந்த வகையில் அவருக்கு விருது கிடைத்ததில் அவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைவது நானாக மட்டுமே இருக்க முடியும்.
இப்படிக்கு,
ஜெயக்குமார்,அமைச்சர்