பார்க்கிங் விமர்சனம்

பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் நேர்மையான அதிகாரி இளம்பருதி எம்.எஸ்.பாஸ்கர்.மனைவி செல்வி ரமா கல்லூரியில் படிக்கும் மகள் அபர்ணா பிரார்த்தனா நாதன் என்று அளவான குடும்பத்துடன் பத்து வருடங்களாக ஒரே வீட்டில் கீழ் பகுதியில் குடியிருக்கிறார்கள்.IT துறையில் வேலை செய்யும் ஈஸ்வர் ஹரிஷ் கல்யாண் தன் காதல் மனைவி கர்ப்பிணியான அத்திகாவுடன் இந்துஜா மாடியில் அதே வீட்டில் குடியேறுகிறார். இரு குடும்பங்களும் அன்போடு பழகுகிறார்கள். பின்னர் சில மாதங்கள் கழித்து ஈஸ்வர் தன் மனைவிக்காக புது கார் ஒன்றை வாங்குகிறார்.அதனை கீழே வீட்டினுள்ளே பார்க்கிங் செய்யும் போது இளம்பருதியின் இரு சக்கர வாகனத்தை வெளியே எடுப்பதில் உள்ளே விடுவதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இது பற்றி பேசி அட்ஜெஸ்ட் செய்து பார்க்கிங் செய்யும் போது சிறு கீரல் காரில் விழுந்து விடுகிறது இதனால் பிரச்சனை மீண்டும் தொடங்குகிறது.முதலில் கீரலில் தொடங்கி பெரிய விரிசலாகி இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சனை எழுகிறது. அதன் பின் இளம்பருதி புது கார் வாங்க பார்க்கிங் பிரச்சனை விஸ்வரூமமெடுக்கிறது.
இந்த பார்க்கிங் பிரச்சனை இரு குடும்பங்களுக்குள்ளும் என்னென்ன பாதிப்பு களை ஏற்படுத்துகிறது இதனால் ஏற்படும் பகையால் எப்படி இவர்கள் மாறுகிறார்கள் இருவரும் மாறி எவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்
இவர்களின் பார்க்கிங் பிரச்சனை முடிவுக்கு வந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹரிஷ் கல்யாண் ரோமென்டிக் ஹீரோவாக நடித்து வந்தவர் இந்த படத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.மனைவி குடும்பம் அலுவலகம் என்று குடும்ப பின்னனியில் நடித்து அசத்தியுள்ளார். இந்துஜா கணவனுக்கு கட்டுப்பட்ட மனைவியாகவும் அறிவுரை கூறி கணவனை மாற்ற முயற்சிப்பது கணவனின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியாவது என பல பரிமாணங்களை ஏற்று நல்ல ஒரு குடும்ப தலைவியாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
அரசு அதிகாரியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வில்லத்தனம் கலந்த குணசித்திர நடிப்பால் நம்மை வெகுவாக கவர்ந்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர் மனைவி செல்வியாக ரமா
மகள் அபர்ணாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா நாதன் இவர்கள் இருவரும் அபத்தமான கதா பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளராக இளவரசு மற்றும் இளங்கோ சண்முகம் கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
சாம் சிஎஸ் இசை படத்தின் படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு படத்தின் எதார்த்தத்தை அழகாக நமக்கு புரிய வைக்கிறது.
ஒரே காம்பவுண்டில் குடியிருக்கும் இரு குடும்பங்களின் பல்வேறு பிரச்சனைகளை மிக எதார்த்தமாக காண்பித்திருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
பார்க்கிங் சிம்பிளான சுவாரஸ்யம்.