ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி நயன்தாரா.பட்டதாரியான அவரது தந்தை ரங்கராஜன் அச்யுத் குமார் ரயில்வே வேலையை விட்டு விட்டு ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம் தயாரித்து தரும் வேலை செய்கிறார். சின்ன வயதிலிருந்தே அன்னபூரணி எல்லா சேவைகளையும் உணரும் தன்மை உடையவர் என்பதால் பிரபலமான பெரிய சமையல் கலை நிபுணராக ஆக விரும்புகிறாள். இந்தியாவின் புகழ்பெற்ற சமையல்காரர்களில் ஒருவரான ஆனந்த் சுந்தர்ராஜ் சத்யராஜ் அவரை ரோல் மாடலாக கருதி அவரைப்போலவே ஆக விரும்புகிறார்.கல்லூரியில் எம்பிஏ படிப்பதாக தன் தந்தையிடம் பொய் சொல்லி விட்டு கேட்டரிங் படிப்பை படிக்கிறார். பெரிய செஃப் ஆக வேண்டுமென்றால் சைவம்,அசைவம் இரண்டையும் சமைக்க வேண்டும் என்பதால் முதலில் தான் வளர்ந்த விதத்தை நினைத்து தயங்குகின்றார், பின்னர் தன் நண்பர் ஜெய்யின் ஆலோசனை உதவியின் படி அசைவ உணவை சமைக்க கற்றுக்கொள்கிறார். ஒரு நாள் தந்தைக்கு இந்த உண்மை தெரிய வர படிப்பை நிறுத்தச்சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. அதன் பின் தன் கனவை நனவாக்க, வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பர்கள் உதவியுடன் வேலை தேடுகிறார். பெரிய ஹோட்டலில் ஆனந்த் சுந்தர்ராஜனின் தயவில் அன்னபூரணி,மிகப்பெரிய செஃப் ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நினைத்து வேலையை துவங்குகின்றார்.
அதற்கு தடையாக ஆனந்த் சுந்தர்ராஜனின் மகன் கார்த்திக் குமார் இருக்கிறார்.இறுதியில் தன் நோக்கத்தில் அன்னபூரணி வெற்றி பெற்றாரா இதில் அன்னபூரணி சந்தித்த சிரமங்கள் என்னென்ன சிறந்த செஃப் வலம் வந்தாரா என்பது மீதிக்கதை.
நயன்தாரா கதா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் தன் பங்கை சரியாக செய்துசிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெய்யின் பங்களிப்பு கொஞ்மாக இருந்தாலும் நயன்தாராவின் நண்பர் ஃபர்ஹானாக நடித்து அசத்தியுள்ளார்.
சத்யராஜ் செஃப் ஆனந்த் சுந்தர்ராஜனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார்,ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார்,குமாரி சச்சு,ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் அவரவர் பங்களிப்பை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் பங்கு படத்திற்கு மிக முக்கியமான ஒன்று.
தமனின் இசை படத்திற்கு பலம்.
பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு படத்திற்கு விறுவிறுப்பு.
ஒரு பெண் சிறந்த செஃப்பாக எத்தனை போராட்டங்களை கடந்து தன் இலக்கை அடைகிறாள் என்பதை அழகாகவும் ஆழமாகவும் காண்பித்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள்.
அன்னபூரணி சவால்களை எதிர்த்து ஜெயிக்க போராடும் பெண்களுக்கு ஒரு மைல் கல்.
