
காளிதாஸ் ஜெயராமின் திருமண நிச்சயத்தில் கலந்து கொள்ள காளிதாஸ் ஜெயராமின்அக்காநமீதா பிரமோத்வும் அக்காவின் கணவர் சாய்ஜு குரூப்பும் இரவு நேரத்தில் காரில் வருகிறார்கள்.பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் கார் நின்றுவிடுகிறது.
நமீதா பிரமோத்தை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு பெட்ரோல் வாங்க செல்கிறார் சாய்ஜுகுரூப்.
சில மணி நேரம் கழித்து அவர்கள் வந்த காரின் மேல் பகுதியில் தலைவிரி கோலத்தில் ஒரு பெண் சாய்ஜுகுரூப்பை வெறித்தனமாக கொலை செய்கிறார்.
இதை பார்த்து நமீதா பிரமோத் அதிர்ச்சியில் மயங்கி விழ தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இன்ஸ்பெக்டர் அஸ்வின்குமார் வழக்கை விசாரித்து கொலையாளியை தேடும்போது
கொலை செய்த அந்த பெண் யார் என்பதை கண்டறிய காளிதாஸ் ஜெயராம் முயற்சி செய்கிறார்.
சிகிச்சைக்கு பின் வீட்டில் இருக்கும் நமீதா பிரமோத்தையும் கடத்தி சென்று கொன்று விடுகிறாள் அந்த பெண்.எதற்காக அந்த பெண் இருவரையும் கொலை செய்தார்.
இறுதியில் கொலையாளியான அந்த பெண்ணை காளிதாஸ் ஜெயராம் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக்கதை.
காளிதாஸ் ஜெயராம் அமைதியான நடித்து கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் ரேபா மோனிகா ஜான், சாய்ஜு குரூப், நமீதா பிரமோத்,கருணாகரன், அஸ்வின்குமார்,ரமேஷ் கண்ணா ,பூ ராமு, பிரியங்கா சாய் என ஏனைய நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
4 மியூசிக்ஸ் இசையும்,ஆர் ஆர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
மர்ம சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைக்கதையை ஸவாரசியமாக அமைத்து அனைவரும் ரசிக்கக்கூடிய கிரைம் திரில்லர் கலந்த படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸை பாராட்டியே ஆக வேண்டும்.
அவள் பெயர் ரஜ்னி அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத த்ரில்லர்.
