
தாத்தா,பாட்டி, அப்பா,அம்மா என தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீட்டில் கர்ப்பிணி மனைவி சிருஷ்டி டாங்கே,தாய் கீதா கைலாசம் மற்றும் மகன் நிதிஷுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நாயகன் கணேஷ் பாபு.

250 வருட பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டில் ஓன்று கணேஷ் பாபு வீட்டில் இருக்க இந்த கட்டிலை பொக்கிஷமாக தன் உயிருக்கு நிகராக பாதுகாத்து வருகிறார் கணேஷ் பாபு.

வெவ்வேறு இடங்களில் வாழும் கணேஷ் பாபுவின் சகோதர,சகோதரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் வாழும் வீட்டை விற்க நினைக்கிறார்கள்.வீட்டை வாங்க வருபவர் வீட்டுடன் சேர்த்து கட்டிலையும் வாங்க நினைக்கிறார் .
கணேஷ்பாபு கட்டிலை தர மறுக்கிறார்.
ஒரு கட்டத்தில் கணேஷ்பாபுவின் அனுமதியுடன் சகோதர, சகோதரிகள் வீட்டை விற்கிறார்கள்.
இதில் வரும் பணத்தை வைத்து கட்டில் வைக்கும்அளவிற்கு பெரிய வீடு வாங்க நினைக்கிறார் கணேஷ் பாபு.ஆனால், அதற்கு தகுந்தாற்போல் வீடு கிடைக்கவில்லை

வீட்டை வாங்கியவரின் நெருக்கடி தாங்க முடியாத கணேஷ்பாபு கட்டிலை பாரம்பரிய பொருட்களை பாதுகாக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் இடத்தில் தற்காலிகமாக வைத்து விட்டு குடும்பத்துடன் புதிய வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார்.
கணேஷ்பாபு கட்டிலை வைப்பதற்காக சொந்த வீடு வாங்கினாரா நிறைமாத கர்ப்பிணியான சிருஷ்டிடாங்கே என்ன ஆனார் எனபதுதான் மீதிக்கதை.

கணேஷ்பாபு தாத்தா, தந்தை, மகன் என மூன்று தலைமுறை கதாபாத்திரங்களாக அமைதியான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சிருஷ்டி டாங்கே கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்து காட்டி இயல்பான நடித்துள்ளார்.
சிறப்பு தோற்றத்தில் வரும் விதார்த் சிறப்பாகவே நடித்துள்ளார். மற்றும் கன்னிகா சினேகன்,கீதா கைலாசம் , இந்திரா சௌந்தர்ராஜன் ,சம்பத்ராம், காதல் கந்தாஸ் , மெட்டிஒலி சாந்தி , செம்மலர் அன்னம் , ஓவியர் ஷியாம் என மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை இனிமை.
wide angle ரவிசங்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இயல்பான தன்மையுடைய கதையை உணர்வுபூர்வமாக இயக்கியுள்ள இயக்குனர் கணேஷ் பாபு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
கட்டில் தாலாட்டுகிறது.
