வெப்பம் குளிர் மழை விமர்சனம்

 

ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திரவ்வுக்கு இஸ்மத் பானுவை திருமணம் செய்து வைக்கிறார்கள்.தம்பதிகள் சந்தோஷமாக உறவு வைத்துக் கொண்டு வாழ்ந்தாலும் பல வருடங்களாக குழந்தை பிறப்பு நடக்கவே இல்லை என்பதில் திரவ்வின் தாய் ரமாவுக்கு பெரும் குறை இருந்து வந்தது இதனால் தன் மூத்த பெண்ணின் மகளையே திரவ்வுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கிறார்.
இதற்கிடையில் அம்மாவுக்குத் தெரியாமல் நகரத்துக்கு வந்து தம்பதிகள் பரிசோதனைகள் மேற்கொள்ள, இதனால் என்னென்ன நிகழ்வுகள் ஏற்படுகிறது என்ன ஆகிறது என்பதை உணர்வு மயமாக கூறுவதே மீதிக்கதை.
படத்தின் ஹீரோ தயாரிப்பாளர் திரவ் அதுமட்டுமில்லாமல் பாடல்களை எழுதி, படத்தை எடிட் செய்து, ஒலிக்கலவையில் பங்கெடுத்து என்று படத்தின் பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைத்திருக்கின்றார் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
நாயகி இஸ்மத் பானு.குழந்தை இல்லாத குறையை தனது முகபாவனையில் காட்டி தத்ரூபமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
ப்ரீத்தி ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் சங்கர் ரங்கராஜனின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இயற்கையின் தத்துவத்தை மனித வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஒரு உணர்வுமயமான கதையை உணர்ச்சி பூர்வமாகவும் சொல்லி இருக்கும் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்துவை பாராட்டியே ஆக வேண்டும்.
வெப்பம் குளிர் மழை குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் தம்பதிகளுக்கு ஆறுதல் தரும் கதை.