க்ரைம் நாவல்களை எழுதி புகழ் பெற்ற ராஜேஷ் குமார் எழுதிய அவரது ஒரு கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் வெப் சீரிஸ் ரேகை.
பிரண்ட்ஸ் ஆப் போலீசாக இருந்த மாணவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் கிடைத்து வெற்றி அங்கு சென்று விசாரிக்கிறார். இந்த விசாரணையில் மேலும் சில இளைஞர்கள் விபத்து,தற்கொலை என வெவ்வேறு அதிர்ச்சி சம்பவங்களில் இறப்பதால் இதெல்லாம் எதனால் நடக்கிறது,கொலை செய்வது யார் என விசாரணை சப் இன்ஸ்பெக்டர் பால ஹாசன்,காவலர் பவித்ரா ஜனனி இவர்கள் இருவரும் காதலித்து பிரிந்த ஜோடி என்றாலும் போலீஸ் வேலையில் சின்சியராக இருக்கின்றனர்.இவர்கள் மூலம் இந்த வழக்கு தீவிரமாகிறது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது.அது என்ன என்பதே மீதிக்கதை.
சப் இன்ஸ்பெக்டராக பால ஹாசன் நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.
பவித்ரா ஜனனி பெண் போலீசாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
வினோதினி இதில் போஸ்ட்மார்டம் செய்யும் டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார்.
க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் ரேகையை மையமாக வைத்து
வெப் சீரிசை வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கும் இயக்குனர் தினகரன் எம் அவர்களுக்கு பாராட்டுகள்.
ரேகை வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.
