இன்ஸ்பெக்டர் விஜய் ராகவேந்திரா மலைகளில் உள்ள ஒரு கிராமத்தில் அங்குள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக தனது பணியை தொடர்கிறார். இந்த நிலையில் விஜய் ராகவேந்திராவின் சகோதரி காதலில் விழுந்ததால் தனது தந்தையால் கைவிடப்பட்டார் இளம் வயதிலேயே தந்தை மற்றும் தம்பியை பிரிந்தார் அவரது கணவர் மலைகளில் உள்ள இந்த கிராமத்திற்கு மாற்றப்படுகிறார்.தனது சகோதரிக்கு இன்று வரை தன் தந்தை மற்றும் தம்பி விஜய் ராகவேந்திரா மீது உள்ள கோபம் தணியவில்லை.அவரிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் கணவன் மனைவி தனியாகவாழ்கிறார்கள்.இந்நிலையில்,அங்கு ஒரே மாதிரியான மற்றும் விசித்திரமான முறையில் இரண்டு கொலைகள் நடக்கின்றன.ஒவ்வொரு கொலையிலும் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்படுவதற்கு முன் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை இது சமூக விரோத ஆளுமை கோளாறு உள்ள ஒரு மனநோயாளியின் செயல் என்று கூறுகிறது. இந்த விசித்திரமான வழக்கை விஜய் ராகவேந்திரா தீவிரமாக விசாரிக்க தொடங்குகிறார்.அப்போது அந்த ஊரில் கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே என்கிற நபர் விஜய் ராகவேந்திராவிடம் உதவி கேட்கிறார் கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே ஒரு விசித்திரமான மனிதர் அவர் பேசும் வார்த்தைகள் புரியாத புதிராக இருக்கும். அவருடன் இருக்கும் சக அதிகாரி கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே மனநிலை சரியில்லாதவர் என்பதை விஜய் ராகவேந்திராவுக்கு தெரிவிக்கிறார்.காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே இன்ஸ்பெக்டரை சந்தித்து பேசி விட்டு சென்ற பின் விஜய் ராகவேந்திராவின் கைதுப்பாக்கி காணாமல் போகிறது.மேலும் அடுத்தடுத்து நடைபெற்ற விசித்திரமானகொலைகள்கோபாலகிருஷ்ணாதேஷ்பாண்டே சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அவரது செயல் மற்றும் அவற்றின் இயல்பு அவரை நோக்கிச் செல்லும் அளவுக்கு இருப்பதால் அவர் மீது விஜய் ராகவேந்திராவுக்கு சந்தேகம் திரும்புகிறது.அதனை தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து சென்று பார்க்கையில் காணாமல் போனதன் கை துப்பாக்கி அவரிடம் இருப்பதை காண்கிறார்.மேலும் அவரது வீட்டில் சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை பார்த்து கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே தான் கொலையாளி என்று ஊர்ஜிதம் செய்த போது கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே விஜய் ராகவேந்திராவை அந்த துப்பாகியால் சுடுகிறார்.விஜய் ராகவேந்திரா சிறு காயத்துடன் தப்பித்து கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டேவை கைது செய்கிறார். கொலையாளியை பிடித்துவிட்டதாக விஜய் ராகவேந்திரா நினைக்கும் நிலையில் அதே பாணியில் விசித்திரமான முறையில் கொலைசெய்யப்பட்ட மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்படுகிறது.இது கொலையாளி யாராக இருக்கலாம் என்ற மர்மத்தை மேலும் சிக்கலாக்குகிறது.தொடர்ச்சியான கொடூரமான கொலைகள் இன்ஸ்பெக்டருக்கு களங்கம் விளைவிக்கின்றன.தீவிர விசாரணையில் ஒரு கட்டத்தில் கொலைகாரன் சாதாரணமாக கொலை செய்யவில்லை கொலையாளி குறிப்பிட்ட நபரை கடத்துவதற்கு முன் அவர்களது வீட்டு முன் ஒரு வீணை பொம்மையை விட்டு செல்கிறார் என்பதை அறிந்து கொலையாளியை தீவிரமாக தேடும் போது அதே போல வீணை பொம்மை ஒன்று தன் அக்காவின் வீட்டு கேட் அருகில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.தன் அக்காவிடம் சென்று அவரது கணவரை பத்திரமாக இருக்கும்படி கூறுகிறார். அக்கா தம்பி மீது இருக்கும் கோபத்தில் அவரை திட்டி அனுப்புகிறார்.இருந்தாலும் விஜய் ராகவேந்திரா சக காவலர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறுகிறார். போலீஸ்காரர்கள் எச்சரிக்கையுடன் இருந்தும் சகோதரியின் கணவர் அந்த மர்ம நபரால் கடத்தப்படுகிறார்.கொலையாளியிடம் இருந்து சீதாராம் தன் அக்காவின் கணவரை காப்பாற்றினாரா விசித்திரமான முறையில் நடைபெறும் கொலைகளுக்கு காரணம் என்ன கொலையாளி கொலை செய்வதற்கு முன் வீணை பொம்மை விட்டு செல்வதற்கு என்ன காரணம் உண்மையான கொலையாளி யார் என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ராகவேந்திரா சீதாராமின் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தி தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மற்றும் கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே,உஷா பண்டாரி படத்தின் மிகப்பெரிய பலம்.மற்றும் அனைத்து துணை நடிகர்கள் கதைக்கு ஏற்ப நேர்த்தியாக நடித்துள்ளனர்.
நவ்நீத் ஷாமின் இசையும்,ஹமந்த் ஆச்சார்யாவின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
கதையில் மனித உணர்வுகள் மற்றும் உளவியலின் உணர்ச்சி இவைகளை நேர்த்தியான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் தேவி பிரசாத் ஷெட்டி அவர்களுக்கு பாராட்டுகள்.
செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் விறுவிறுப்பு நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.
