‘கர ’ விமர்சனம்

நாயகன் தனுஷ் அப்பா கே எஸ் ரவிக்குமார் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது 16 வயதில் ஊரை விட்டு ஓடி விடுகிறார்.திருட்டு வேலை செய்து வருகிறார்.நாயகி மமிதா பைஜூவை காதலிக்கும் தனுஷ் அவரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்படுவதால் கடைசியாக ஒரு திருட்டு வேலையை செய்ய நினைக்கிறார்.திருவெறும்பூரில் இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க நாயகன் தனுஷ் மற்றும் பிரித்வி இருவரும் செல்கிறார்கள்.இதில் எதிர்பாராத விதமாக தனுஷ் மாட்டிக் கொள்ள,பிரித்வி பாண்டியராஜ்  தப்பிச்சென்று விடுகிறார்.உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுராஜ்,தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனுஷை பல பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்.இதையடுத்து தனுஷ் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து விடுகிறார்.
6 மாதங்களுக்குப் பிறகு ரேணிகுண்டாவில் திருட்டு வேலையை விட்டு விட்டு,மனைவி மமிதா பைஜூ உடன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.மனைவி கஷ்டப்படுவதை பார்த்துசொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து தனது அப்பாவை பார்த்து பணம் வாங்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறார்.அங்கு அப்பா கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து  நிலத்தை விற்று பணம் தருமாறு கேட்கிறார்.நிலம், வங்கியில் அடமானத்தில் இருப்பதாக அப்பா சொல்ல தனுஷ் அதிர்ச்சி  அடைகிறார். இதே சமயம் வங்கி கடனை கட்டாததால் ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது.   இதனால் அதிர்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமார் இறந்து விடுகிறார்.இதனையடுத்து அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் உடலை அவர்களுடைய நிலத்தில் அடக்கம் செய்ய தனுஷ் நினைக்கிறார்.ஆனால் வங்கி அதிகாரிகள் அடக்கம் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள். இந்நிலையில்  நிலத்தை மீட்டு தந்தையின் உடலை அடக்கம் செய்ய கடன் கொடுத்த வங்கியிலே கொள்ளை அடிக்க தனுஷ் முடிவு செய்கிறார்.தனுஷ் வங்கியை கொள்ளையடித்தாரா இல்லையா அப்பா உடலை அடக்கம் செய்தாரா இல்லையா போலீஸ் உயரதிகாரி சுராஜ், தனுஷை கைது செய்தாரா இல்லையா என்பதே  படத்தின் மீதிக்கதை.
கரசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனுஷ் மனைவியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ கிராமத்து பெண்ணாக கொடுத்த வேலையை சரியாக சிறப்பாக செய்திருக்கிறார்.
மற்றும் கே எஸ் ரவிக்குமார்,கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு,ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பாக தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையும்,தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
வங்கிகளால் பொது மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மைய கருவாக வைத்து ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை சிறந்த முறையில் உருவாக்கியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் ராஜா அவர்களுக்கு பாராட்டுகள்.
‘கர’ அனைத்து தரப்பினரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.