அனந்தன்காடு விமர்சனம்

“அனந்தன்காடு” என்று அழைக்கப்பட்ட பகுதியில் இங்கு வாழும் நான்கு பேர் கொண்ட கூலிப்படை இளைஞர்கள் வன்முறை பாதையை தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இவர்களுக்குள் இசை மீது ஒரு தீவிரமான பற்றும் இருக்கிறது. இந்த முரண்பாடான வன்முறை வாழ்க்கை அவர்களுக்குப் பணத்தையும், தங்கள் அரசியல் எஜமானர்களின் எல்லைகளுக்குள் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தையும் பெற்றுத் தருகிறது.அவர்களிடம் தஞ்சமடையும் ஈழ தமிழர் ஆர்யா அவர்களின் அரசியல் எஜமானராக இருக்கும் முரளி கோபி மற்றும் மாஃபியா தலைவன் சுனில் ஆகியோருக்கு இடையே நடக்கும் இரட்டைத் தன்மை கொண்ட அதிகாரப் போட்டிகளும் சமூக-அரசியல் சூழ்ச்சிகளும் அவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது. அதிகாரத்தின் பெயரில் அரசு மற்றும் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் “ஆபரேஷன் அனந்தன்” என்ற அதிரடி நடவடிக்கை அங்கு வாழும் காடுகளின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது.இந்தச் சூழலில் நீதிக்காகவும் தன் மக்களுக்காகவும் போராடும் ஒருவனாக ஆர்யா உருவெடுக்கிறார்.ஒரு கட்டத்தில் தங்களின் இருப்புக்கே ஆபத்து வரும்போது இந்த வன்முறைச் சூழலில் இருந்து தப்பிக்கவும், துரோகங்களை வீழ்த்தி தங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காப்பாற்றும் அவர்கள் நடத்தும் வாழ்வா சாவா போராட்டமே படத்தின் மீதிக்கதை.
ஈழ தமிழர் வெற்றிவேல் குமரனாக ஆர்யா ஆக்‌ஷன்,உணர்ச்சி,கோபம்,அமைதி என பல பரிமாணங்களை அட்டகாசமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
நிகிலா விமல் தீபா கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் ரெஜினா கசாண்ட்ரா,சுனில், இந்திரன்ஸ்,சித்திக்,அஜய்,போஸ் வெங்கட், தேவ் மோகன்,ரெஞ்சி பணிக்கர்,அஞ்சலி பி நாயர்,சாந்தி பாலச்சந்திரன்,அச்சுத் குமார், விஜயராகவன்,சாகர் சூர்யா,அல்சின் பென்னி,சரத் அப்பானி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அஜனீஷ் லோக்நாத்தின் இசையும்,ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படி ஒரு அரசியல் திரில்லர் கதையை கையில் எடுத்து எழுத்தாளர் முரளி கோபியினுடைய திரைக்கதையை மிகவும் சிறப்பாகக் கையாண்டு படத்தை திறம்பட இயக்கி இருக்கும் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
அனந்தன்காடு உணர்வுப்பூர்வமான அரசியல் த்ரில்லர்.