அந்தரன் விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜன் நாயகி இவானா திருமணம் செய்ய நினைப்பவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரணையை தொடங்குகிறார்.இவானா ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிக்கிறார் அவரை திருமணம் செய்ய எண்ணும்போது திடீரென்று ஆட்டோ டிரைவர் இறக்கிறார்.அதிர்ச்சி அடையும் இவானாவை அவரது தந்தை ஆறுதல் கூறி தேற்றுவதுடன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.அந்த நபரும் விபத்தில் இருக்கிறார்.இதேபோல் இவானாவை திருமணம் செய்ய நினைப்பவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை தொடங்குகிறது.போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜன் வழக்கை விசாரிக்கிறார்.ஒரு கட்டத்தில் இவானா மீது இன்ஸ்பெக்டருக்கு காதல் மலர்கிறது. அவரும் இறக்கிறாரா அல்லது இவானாவை மணக்கிறாரா  என்பதே மீதிக்கதை.
பிரஜன் டிப் டாப் போலீஸ் அதிகாரியாக மிடுக்காக வந்து சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகி இவானா தனது அப்பாவித்தனமான முகத்தோடு தனது காதலுக்கு எதிராக யார் சதி செய்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் அதிரன்,அனுபமா குமார்,செந்தில்குமாரி,பத்மன்,ரமேஷ் பாபு கீதா,பிரியங்கா செல்வி,ஐஸ்வர்யா கண்ணன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹரி எஸ் ஆர் இசையும்,கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
சஸ்பென்ஸ் கதையில் அதிரடி மாற்றங்களாக சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் சந்தோஷ் ராவணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
அந்தரன்  ரொமான்டிக்  சஸ்பென்ஸ் த்ரில்லர்.