நாயகன் மாதவன் ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் ரூ.250க்கு ஒரு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குகிறார். உடனே அந்த மோட்டார் சைக்கிளை அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து அதன் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்கிறார். பிறகு மின்சாரத்தில் இயங்கும் ஒரு மோட்டாரை தயாரிக்கிறார்.வீட்டுக்கு வெங்காயம் வெட்டுவத்ற்கு ஒரு கருவியை கண்டுபிடித்து தன் மனைவிக்கு கொடுக்கிறார்.மின்சாரத்தில் தயிர் கடையும் எந்திரத்தை தயாரித்து தன் மனைவிக்கு கொடுக்கிறார்.பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு பேருந்தை செய்து அதை ஓட்டிகாட்டுகிறார்.இப்படி ஒரு விவசாய ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் படிப்படியாக புதிய கண்டுபிடிப்புகளை செய்து‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’என்ற கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைக்கிறார்.பள்ளி படிப்பறிவு இல்லாமல் தன் சொந்த அறிவால் விஞ்ஞானி ஆகி பெரும் செல்வந்தராகிறார். ஆனால் இவரின் வருமானத்துக்கு முறையாக வருமான்வரி கட்டாமல் அரசை ஏமாற்றுகிறார்.இவரிடம் எப்படியும் வருமானவரியை வசூல் செய்தே ஆகவேண்டும் என்று வருமானவரி அதிகாரி ஜெயராமன் மாதவனுக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார்.அரசாங்கம் இவரின் அலுவலகத்தையும் விட்டையும் பூட்டி ஜப்தி செய்கிறது. வங்கி கணக்குகளை முடக்குகிறது.அத்தனையும் எதிர்கொள்கிறார். ஜெயராமன் கொடுக்கும் பல தொந்தரவுகளில் இருந்து மாதவன் மீண்டாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
படம் முழுக்க ஜிடிநாயுடுவின் பகுத்தறிவு விவாதங்களை,மாதவன் தன் விழிகளாலும் புன்சிரிப்பினாலும் உடல்மொழியாலும் கொண்டு வந்து நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார்.திரையில் ஜிடிநாயுடுவை மாதவன் உருவில் காணமுடீகிறது.
மற்றும் சத்தியராஜ்,ஜெயராமன். பிரியாமணி,துஷாரா விஜயன்,தம்பி ராமையா,அதிதி பாலன்,பிரிகிடா,ஷீலா ராஜ்குமார் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவும்,கோவிந்த் வசந்தாவின் இசையும் கதைக்கு பெரிய பலம்.
இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படத்தை மாதவனுடன் இணைந்து சிறந்த திரைக்கதை அமைத்து மிகச்சிறந்த கமர்ஷியல் படமாக இயக்கி இருக்கும் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஜிடிநாயுடு அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய படம்.
