கதாநாயகன் ரிஷிகாந்த் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.ரிஷிகாந்துக்கு தெரியாமலேயே அவரது திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.மறுபுறம் மணப்பெண் அனீஸ்மா, தான் காதலித்தவருடன் ஓடிப்போகத் தயாராக இருக்கிறார்.எதிர்பாராத சூழலில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மொத ராத்திரியில் அனிஷ்மா சொல்லும் உண்மை அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் மீதிக் கதை.
ரிஷிகாந்த் தனது கதாபாத்திரத்தை இயல்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.
அனீஸ்மா இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் சேத்தன்,அப்துல்,லீ,பக்ஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
பரத் சங்கரின் பின்னணி இசையும், சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவும் கதைக்கு பெரிய பலம்.
மனிதர்களின் உறவுகளையும் உரையாடல்களையும் மையமாக வைத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து கதையை இயக்கி இருக்கும் இயக்குனர் ராஜா கருப்புசாமி அவர்களுக்கு பாராட்டுகள்.
‘மொத ராத்திரி’.சிறந்த கலகல்ப்பான அனைவரும் குடும்பத்தினருடன் சென்று பார்க்கவேண்டிய படம்.
