நாயகன் ரவிதேஜா தனது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் பேபி நட்சத்திரா மற்றும் மனைவி பிரியா பவானி சங்கருடன் ஆந்திர மாநிலத்தின் ஒரு கடைகோடி எல்லைக் கிராமத்தில வாழ்ந்து வருகிறார்.மதுவுக்கு அடிமையான ரவிதேஜா ஊரில் இருக்கும் பெண் குழந்தைகள் மீது அளவற்ற பாசமும், அவர்களைப் பாதுகாக்கும் எண்ணமும் கொண்டவர்.தனது மகளின் சிறு உறக்கம் கூட கலைந்து விடக்கூடாது என்பதற்காக அதிவேகமாக வரும் லாரி ஓட்டுநரை தாக்கும் அளவுக்கு மகள் மீது அசுரப் பாசம் வைத்துள்ளார்.41 நாட்கள் ஐயப்ப தீக்ஷை எடுக்கும் போது மட்டும் மது அருந்தாமல் நல்லவனாக இருக்கிறார்.இனி மது அருந்த வேண்டாம் என்று கூறும் மகளின் பாசம் கோரிக்கையை ஏற்று,புனிதமான ஐயப்ப தீட்சை எடுத்து,மாலை அணிந்து, விரதத்தை ஏற்று, மதுவை முற்றுப்புள்ளி வைக்கிறார். தலையில் இருமுடியை சுமந்து கொண்டு புனித சபரிமலை நோக்கி யாத்திரையைத் தொடங்கும் தருணத்தில்,கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு கொடூரமான ஆசிரியர் ரமேஷ் இந்திரா மூலம் அச்சுறுத்தல் எழுகிறது. இந்தச் சுழல் இறுதியில் ரவிதேஜாவின் மகளையும் அச்சுறுத்த, கையில் சாமி மாலையும், தலையில் இருமுடியும் ஏந்தியபடி அச்ச உணர்வு பாதுகாப்பானது எனக் கருதும் ஒரு தந்தை சாய் குமார் எதையும் பயமின்றி எதிர்கொள்ளச் சொல்லும் ரவிதேஜா என இரு வேறு தந்தைமார்களின் பின்னணியில் கதையின் போக்கில் ஒரு மர்ம மரணமும் கொலையும் நடக்கிறது.மர்மமாக முறையில் கொல்லப்பட்டது யார் சட்டம்-ஒழுங்கு இல்லாத இந்தச் சூழலில் விரதக் கட்டுப்பாட்டையும் தாண்டித் மகள் மீது உள்ள தனது அசுரப் பாசத்தினால் அவர் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவதே மீதிக்கதை.
தனது வழக்கமான துள்ளலான பாணியை விடுத்து, அமைதியும் ஆழமும் நிறைந்த ஒரு புதிய பரிமாணத்தில் திரையில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ரவி தேஜா
பிரியா பவானி சங்கர் கதைக்குத் தேவையான குடும்ப பாங்கான தோற்றத்தில் தோன்றி தனது பங்கினை சிறப்பாக வழங்கியுள்ளார்.
மற்றும் பேபி நட்சத்திரா.சாய் குமார்,அஜய் கோஷ்,ரமேஷ் இந்திரா,சுவாசிகா,மீசல லட்சுமணன்,ராஜ்குமார் கசிரெட்டி,ரமணா பார்கவ்,கிஷோர் கஞ்சரபாலம்,கார்த்திக் அடுசுமல்லி,மகேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும்,விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
சிவா நிர்வாணா ஒரு எளியக் கதைக் களத்தை எடுத்து அதில் பக்தி உணர்வையும்,தந்தை-மகள் அன்பையும், அதிரடி அம்சங்களையும் ஒன்றாக இணைத்து,அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும்படியான ஒரு தரமான சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பதற்காக அவருக்கு பாராட்டுகள்.
இருமுடி கட்டு தந்தை அன்பின் ஆழத்தையும் ஆன்மீகத்தின் தூய்மையையும் பிணைத்து நெஞ்சைத் தொடும் ஒரு உன்னதமான அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு உன்னத படைப்பு.
