கதையின் நாயகன் இளன் துபாயில் சிவில் என்ஜினியராகப் பணியாற்றி வரும் இவர் வேலை அழுத்தங்கள் பிடிக்காமல், தாய்நாட்டிற்குத் திரும்பித் தன் அம்மாவின் கைமணத்தில் சுடச்சுட தோசை சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக வாழ வேண்டும் என்ற ஆசையில் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறார். மறுபுறம்,சான்வி மேக்னா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இன்ஃப்ளூயன்சராக இருக்கும் இவர்
தனது உழைப்பால் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புமிக்க பெண்ணாக தனது பெற்றோர்,தாத்தா மற்றும் செல்லப் பிராணியுடன் தனது சொந்த வீட்டில் மிகுந்த அன்போடு வாழ்ந்து வருகிறார்.இவர்கள் இருவரும் எதிர்பாராமல் சந்தித்துக் காதலித்துத் திருமணமும் செய்துகொள்ளும் நிலையில் திருமண மண்டபத்திலிருந்து கணவர் வீட்டிற்கு காரில் புறப்படும் அந்த முக்கியமான தருணத்தில் தான் ஏன் தனது சொந்த வீட்டையும் கனவுகளையும் விட்டுவிட்டு கணவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி சான்வி மேக்னாவின் மனதிற்குள் உதிக்க உடனடியாக காரில் இருந்து இறங்கி ஓடுகிறாள் மனைவியைப் பின்தொடர்ந்து ஓடும் இளன், சமூகத்தின் வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி வேறு வழியின்றி மனைவியின் வீட்டிலேயே சென்று‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ஆகக் குடியேற சம்மதிக்கிறான் அங்குச் சென்ற பிறகு வேலை இல்லாத ஒரு ஆணாக மாமியாரின் கடுமையான சொற்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்வது, வீட்டு வேலைகளைச் செய்யும்போது அவனது ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவது மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மாமியார்-மருமகன் இடையே வெடிக்கும் மோதல்கள் எனப் பல கட்டடங்களைக் கடக்கும் இளன், இறுதியாகத் தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, தம்பதியருக்குள் இருக்கும் பாலினப் பாகுபாடுகளை உடைத்து, இருவருக்குமான சமத்துவமான வாழ்க்கையை எவ்வாறு கண்டடைகிறார்கள் என்பதே மீதிக்கதை.
இளன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அறிமுக நடிகர் இளன் அறிமுக நடிகர் போல இல்லாமல் மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பவித்ராவாக வரும் சான்வி மேக்னா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமார்,எம்.எஸ்.பாஸ்கர், வினோத்தாக யோகி பாபு,செந்தில்,கீதா கைலாசம்,இளங்கோ குமரவேல்,மாறன், டீப்ஸ்,“ராஜா ராணி” பாண்டியன், ராஜாமணி,மோகன பிரியா,ஆரூஷ் ஆகியோர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையும்,ஒளிப்பதிவாளர் தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
ஒரு புத்துணர்ச்சியான கதையை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து சிறந்த முறையில் இயக்கி இயக்குநராகவும்,கதாநாயகனாகவம்,பாடல ஆசிரியராகவும் வலம் வந்திருக்கும் இளன் அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
‘பியார் பிரேமா கல்யாணம்’ அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய குடும்ப காமெடி கலாட்டா.
