
கார்டூனிஸ்ட் கலைஞராக இருக்கும் நாயகன் கிரிஷ் காரில் பயணிக்கும் ஒரு பத்திரிகையாளர் மூலம் மிகப்பெரிய மருந்து ஊழல் பற்றிய தகவல் தெரிகிறது.
நாயகன் கிரிஷ் ஒரு இராணுவ வீரரின் மகன் என்பதால் நாட்டைக் காப்பாற்றும் எண்ணத்துடன் போலிமருந்து வியாபாரிகளை நெருங்கி பல ஆதாரங்களைச் சேகரிக்கிறார்.
ஆனால் வில்லன்களிடம் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு ஆளாகிறார். அதன்விளைவு 3 ஆண்டுகள் சுயநினைவின்றி மருத்துவமனையில் இருக்கிறார்.
அதன்பின் அவருக்கு நினைவு திரும்புகிறது. கூடவே ஒரு விநோத நோயும் வருகிறது. அதனால் மூன்றாண்டுகளுக்கு முன் பார்த்த நண்பர்கள் உறவுகளின் முகங்கள் முற்றிலும் மாறுபட்டுத் தெரிகிறது.
இவ்வளவு பிரச்சனைகளை தாண்டிஅவர், மருந்து கொள்ளைக்கார்ர்களைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதைப் பற்றி சொல்லியிருக்கும் படம்தான் வாட்ச்.
நாயகன் கிரிஷ் துடிப்புடன் இயல்பாகவும் நடித்திருக்கிறார்.
நாயகி சப்ரினா ஆலமுக்கு அவ்வப்போது வந்து போகும் வேடம்.
வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் ஆகியோர் அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
முகமது அமீன், விக்னேஷ் வாசு,இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நால்வர் ஒளிப்பதிவை அழகாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் மும்பை மாநகரை வானிலிருந்து சுற்றிக்காட்டும் ஒளிப்பதிவாளர்கள் அதன்பின் சென்னையை மற்றும் கடற்புறங்களை வானிலிருந்தும் தரையிலிருந்தும் சுற்றிக் காட்டுகிறார்கள்.
சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்கள் நன்றாக கதைக்கு ஏற்றது போல் அமைந்துள்ளது.பின்னணி இசை கொஞ்சம் சுமார்.
இயக்குனர் விஜய் அசோகன்.
வித்தியாசமான முயற்சி எடுத்து ள்ளார் பாராட்டுக்கள்.
