ஆஹா தமிழ் 100% தமிழ் உள்ளடக்கத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றது!


*ஆஹா தமிழ் 100% தமிழ் உள்ளடக்கத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றது!*

*திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர், ஆஹா தமிழ் தளத்தை, சென்னையில் நிகழ்ந்த நட்சத்திர விழாவில் துவக்கி வைத்தார்.*

*நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக அறிவிக்கபட்டனர்.*

சென்னை,14 ஏப்ரல்,2022:

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் இன்று தமிழ் தளத்தை துவங்கியுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஶ்ரீ முத்துவேல் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நியமனமான நடிகர் சிலம்பரசன் என்கிற சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் அவருடன் இணைந்து விழாவை சிறப்பித்தனர். ஆஹா, தமிழ் புத்தாண்டை ஒட்டி, 100% தமிழ் கொண்டாட்டத்துடன், தமிழ் உள்ளடக்கத்தின் அற்புதமான வரிசையை வெளியிட்டது.இந்நிகழ்வில் பிராண்ட் அம்பாசிட்டர்கள் நடித்த “ தட்டினா தமிழ் மட்டுமே” என்ற விளம்பர படத்தை வெளியிட்டனர். இந்த விளம்பரங்கள் ஒரு பொழுதுபோக்கு அதன் மொழி சார்ந்த மக்களை எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்திருந்தது.

தமிழ் சினிமாவின் நாயகர்கள் S.P.முத்துராமன், பாரதிராஜா, தெய்வத்திரு AV மெய்யப்பன், தெய்வத்திரு கே பாலசந்தர், தெய்வத்திரு M.S.விஸ்வநாதன் அவர்கள்,தெய்வத்திரு SP பாலசுப்ரமணியம், மற்றும் தெய்வத்திருமதி ஶ்ரீதேவி ஆகியோருக்கு, அவர்களது தமிழ்சினிமா அர்பணிப்பை கௌரவிக்கும் வகையில் “ கலைஞர் பெருமை” என்ற விருதை தமிழக முதல்வர் மற்றும் ஆஹா முதன்மை நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர்.

திரு. மு க ஸ்டாலின் அவர்களது உரையுடன் இவ்விழா இனிதே துவங்கியது. அந்தந்த மொழிகளுக்கான உள்ளடக்கம் அடங்கிய பொழுதுபோக்குகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை குறித்து அவர் கூறினார். அவரது உரையை தொடந்து, திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தந்தைக்கு, மேடையில் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

திரு மு கருணாநிதி, தமிழகத்தின் இரண்டாவது முதல்வர் மற்றும் திமுக தலைவர், தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் சினிமாவில் எழுத்தாளாராக அவர் ஆற்றிய பங்கிற்கும் மரியாதை செலுத்தபட்டது. தமிழ் சினிமாவின் முக்கியமான நபர்கள், இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

*தமிழ் வெளியீட்டின் அறிவிப்பை பற்றி, பிரோமோட்டர், ஆஹா நிறுவனம் திரு, ராம் ஜுபால்லி கூறியதாவது….*

மாறுபட்ட மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளகூடிய உள்ளடக்கங்கள் வழங்குவதற்காக ஆஹா தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று நமது தமிழ் உள்ளடக்க பட்டியலை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஒருவரது சொந்த மொழியில் கதைகளை கேட்டு, கொண்டாடுவது மகிழ்ச்சிகரமான ஒன்றாகும்.

சிலம்பரசன் மற்றும் அனிருத் எங்களது பிராண்ட் அம்பாசிட்டர் மட்டும் அல்ல, எங்களது பிராண்ட் பாட்னர்களும் அவர்கள் தான்.எங்களுடன் அவர்கள் இணைந்திருப்பது பொது மக்களிடையே ஒரு இலகுவான அறிமுகத்தை எங்களுக்கு தரும் மற்றும் பார்வையாளர்களின் மரியாதையையும் பெறவும் உதவும். தெலுங்கில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஆஹா தமிழிலும் தரமான உள்ளடக்கங்களை பல வகைகளில், அனைத்து வயது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது. எங்கள் தமிழ் உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை ஒரிஜினல் படைப்புகள் மற்றும் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய படைப்பாளர்களுடன், இந்த தளம் கைகோர்த்து செயல்படவுள்ளது, விவேகமானது என்று நான் நம்புகிறேன்.”

*தமிழ் வெளியீட்டின் அறிவிப்பை பற்றி, பிரோமோட்டர், ஆஹா நிறுவனம் திரு. அல்லு அரவிந்த் கூறியதாவது….*

தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளிகளைக் கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட எங்கள் தமிழ உள்ளடக்கத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் சொல்லப்பட்ட பல்வேறு கதைகள் மற்றும் வகைகளின் தொகுப்பாகும். அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராக உள்ள எங்களது தமிழ் உள்ளடக்கங்கள், இயக்குனர் வெற்றிமாறன் உடைய பேட்டைக்காளியுடன், பிரியாமணி நடித்துள்ள பாமா கலாபம், அம்முச்சி 2, ரமணி vs ரமணி 3 என மிகப்பெரிய வரிசை உள்ளது. தியேட்டரில் வெளியான ஜீவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடித்துள்ள செல்ஃபி, கார்த்தி நடித்துள்ள சர்தார், வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என பெரிய திரைப்படங்களும் வரிசையில் உள்ளது. ஆஹா நிறுவனம் தமிழில் அபரிமிதமான உள்ளடக்கத்துடன், சிறந்த தமிழ் திறமைகளை முன்னுக்கு கொண்டு வந்து அவர்களின் கலைத்திறனை உலகளவில் வெளிப்படுத்தும்.

*சி இ ஒ, ஆஹா நிறுவனம் திரு, அஜித் தாகூர், கூறியதாவது..*

இந்தியாவிலிருந்தும், உலகம் முழுவதும் பரவியுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடமிருந்தும் ஆஹாவுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் அன்பினால் நாங்கள் உற்சாகத்தில் உள்ளோம். எங்கள் பயனர்கள் ரசிக்கும் வகையிலான கதைகளை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆஹா தொடங்கியதிலிருந்து, நாங்கள் எங்கள் பயனர்களை ஆழ்ந்து கேட்டு, அவர்கள் பார்க்க விரும்பும் கதைகளை கவனமாக வடிவமைத்தோம். ஆஹா இப்போது அதன் பயணத்தைத் தொடங்கிவிட்டது, ஆனால் விரைவில் உலகளவில் தமிழ் மொழிக்கான பொழுதுபோக்கு தளமாக நாங்கள் இருப்போம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஆஹா ஏற்கனவே தனது தெலுங்கு உள்ளடக்கத்தின் வெற்றியுடன் உள்ளூர் பொழுதுபோக்குகளில் வலுவான சவாலான பிராண்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தமிழில் அறிமுகமான பிறகு உலகெங்கிலும் அதன் பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக அதிகரித்துள்ளது .

2020-ல் தெலுங்கில் துவங்கிய ஆஹா பயணம், ஒரு மில்லியன் சந்தாதாரர்களை ஆரம்பித்த ஒரு வருடத்திலயே பெற்று, அதன் அற்புதமான பயணத்தை துவங்கியது, இப்போது 1.8 மில்லியன் சந்தாதாரர்கள் மற்றும் 27 மில்லியன் டவுன்லோடுகள் உடன் ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முக்கியமான நிறுவனமாக விளங்குகிறது .
ஆஹா தமிழுக்கான ஆண்டு சந்தா பார்வையாளர்களுக்கு மலிவு விலையான ரூ.365க்கு கிடைக்கிறது, அதாவது ஒரு நாளைக்கு 1 ரூபாயாக இருக்கிறது.

*ஆஹா பற்றி:*

2020-ல் துவங்கப்பட்டது, ஆஹா 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை வழங்கும் இந்திய வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்ட்ரீமிங் சேவையாகும்.
இது 100% தெலுங்கு OTT உடன் தொடங்கப்பட்டது மற்றும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புதிய வெளியீடுகளாக இணையத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களிள் வெளியிடபட்டு உலகம் முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்றது.
100% உள்ளூர் பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆஹா சமீபத்தில் 100% தமிழ் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைக் கொண்ட ஆஹா தமிழ் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. கீதா ஆர்ட்ஸ் மற்றும் மை ஹோம் குழுமத்தின் கூட்டு முயற்சியான அர்ஹா மீடியா & பிராட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆஹா தளம். திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் புனைகதை அல்லாத நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பல்வேறு வடிவங்களில் அசல் தெலுங்கு உள்ளடக்கத்தை ஆஹா உருவாக்கி வருகிறது.

மேலும் தகவலுக்கு, பின்தொடர:
https://www.aha.video/all