கலைஞர் டிவியில் அஜித்தின் “துணிவு”

கலைஞர் டிவியில் அஜித்தின் “துணிவு” –
தீப ஒளித் திருநாள் சிறப்புத் திரைப்படம்

நமது கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித் திருநாள் சிறப்பு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

அதன்படி, வருகிற நவம்பர் 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பிற்பகல் 1.30 மணிக்கு மற்றும் மாலை 6 மணிக்கு எச்.வினோத் இயக்கத்தில் “தல” அஜித் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான “துணிவு” திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதையில், குடும்பங்கள் ரசிக்கும்படியாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பாவனி ரெட்டி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவையும், ஜிப்ரான் இசையையும் கவனித்திருக்கிறார்கள்.
தீப ஒளித்திருநாளன்று கலைஞர் தொலைக்காட்சியில் “துணிவு” திரைப்படத்தை காணத்தயாராகுங்கள்.